(கு - ரை.) “இவன் யார்.....இவனேயென்னும்புறப்பாட்டினுட்சேரனை முன்னிலையாக்கி முடமோசியார் கூறுகின்ற காலத்துஇவனென்பது முன்னிலைப்படர்க்கையாய் நின்றது” (தொல்.எச்ச. சூ. 68, ந.) ; “இவன் யார்.....இவனேயென்னும்புறப்பாட்டினுள் இவனென்பது முன்னிலைப் படர்க்கையாய்நிற்றலும் இன்னோரன்ன பிறவும் இப்புறனடையானேஅமைத்துக்கொள்க.” (இ. வி. சூ. 372, உரை) 2. “புலிப்பொறிப் போர்வைநீக்கி” (சீவக. 266) 3. எழில் - எழுச்சி; “நுண்மாணுழைபுல மில்லா னெழில்” (குறள். 407) 2 - 4. “தன்மையென்பது சாதியியல்பு;பார்ப்பார் அரசர் இடையர் குறவரென்று இன்னோர்மாட்டு ஒருவரை யொருவர் ஒவ்வாமற் கிடக்கும் இயல்பு;அது மெய்த்தன்மையின்கண் வேறுபட்டு வருதலின் மெய்ப்பாடாயிற்று;.........‘புலிநிறக்கவசம் பூம்பொறி சிதைய.....களிற்று மிசையோனே‘எனவும்......வரும்” (தொல். மெய்ப். சூ. 12. இளம்.) 5. களிற்றிற்கு நாவாயுவமை ; கலித்.132 : 5-7; “நளிகடலிருங் குட்டத்து, வளிபுடைத்த கலம்போலக்,களிறு சென்று களனகற்றவும்” (புறநா. 26 : 1 - 3);“வீங்கு நோன்கயிறு...கடாஅயானையும்” (மதுரைக்.376 - 83); “நீயா னடுங்க...........கால வேகங் களிமயக்குற்றென”(மணி. 4 : 29 - 44) 6. புறநா. 396 : 25 - 7; பதிற்.90 : 17 - 8. 7. “எறிசுற விளையவர்”, “கோட்டுமீன்குழாத்தின் மள்ளரீண்டினர்”, “தூத்திரட்சுறாவினந் தொக்கபோன் மறவரும்” (சீவக.1446, 1845, 2325). பலபொருளோடு பலபொருள்கள் உவமையாய்வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; இ. வி. சூ. 639, உரை. 5 - 8. பல பொருளோடு பல பொருள்உவமையாய் வந்ததற்கு மேற்கோள்; தண்டி. சூ. 30,உரை. 11. சூடு - நெல்லரி; “சூடுகோ டாகப்பிறக்கி” (பொருந. 243) 10 - 11. “எல்வளை மகளிர் தெள்விளியிசைப்பிற், பழனக் காவிற் பசுமயி லாலும்”,“கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற், பழன மஞ்ஞைமழைசெத் தாலும்” (பதிற். 27 : 7 - 8, 90 : 41 - 2) 12. கொழுமீன் : ஒரு சாதிமீன்; திருச்சிற்.188 பேர். 13. நாடுகிழவோன் : “காவிரிபுரக்கு நாடுகிழ வோனே” (பொருந. 248) (13)
1. “வேளா விக்கோமாளிகை காட்டி” (சிலப். 28 : 198)
|