திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) முகிலினம் சென்று தங்கும் உயர்ந்தமலைக்குத் தலைவன், சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும் வாய்த்த (வாய்த்த-தப்பாத) வாளினையுமுடைய அண்டிரனது மலையைப் பாடினவோ களிறுகளை மிகவுமுடைய இந்தக் கவினையுடைய காடு?-எ - று. யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டினும் அண்டிரனைப் பாடி னோர், யானை மிகவுமுடையரென்று அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிரனென்பதும் ஒரு பெயர். |