321
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெட்
சுளகிடை யுணங்கற் செவ்வி கொண்டுடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
5குடந்தையஞ் செவிய கோட்டெலி யாட்டக்
கலியார் வரகின் பிறங்குபீ ளொளிக்கும்
வன்புல வைப்பி னதுவே சென்று
தின்பழம் பசீஇ.... னனோ பாண
வாள்வடு விளங்கிய சென்னிச்
10செருவெங் குருசி லோம்பு மூரே.

(பி - ம்.) 1 ‘பொரிப்புறப்’,‘செலவன’ 3 ‘களகிடை’, ‘கொண்டென’ 4 ‘வேனிறகொண்’

திணையும் துறையும் அவை.

உறையூர் மருத்துவன் தாமோதரனார்.


(கு - ரை.) 1. பொறி - புள்ளி. பூழ்- குறும்பூழ்ப்பறவை.

2. மேந்தோல் - மேலேயுள்ள தோல்.

3. உணங்கல் - உலருகின்ற வெள்ளெள்ளை;செவ்வியுணங்கலை. கொண்டு உடன்.

4. செய்யுளிடத்துக் காலத்தை அடையாகஅடுத்துவருமொழி இனத்தைக் காட்டாததற்கு மேற்கோள்;நன். சூ. 400, மயிலை.; நன். வி. சூ. 401; இ. வி.சூ. 312, உரை.

5. குடந்தை - வளைவு; “குடந்தையஞ்செவிய கோட்பவ ரொடுங்கி” (அகநா. 284 : 4).கோடு - கரை. ஆட்ட - அலைத்தற்கு. சேவல் எலியை அலைக்க.

6. பீள் - கரு. வரகின் பீளிற் சேவல்ஒளிக்கும்; பீளென்றது கதிர்ப்போரை.

10. செரு வெங் குருசில் - போரைவிரும்புதலையுடைய தலைவன்.

(321)