(கு - ரை.) 1. பிறக்கு - பின்.கடையூஉ - செலுத்தி; ‘’நிலம்பிறக் கிடுவபோலுங்கொய்சுவற் புரவி” (சீவக. 3049) 2. மனத்தின் விசையையும் ஒப்பன்றென்றுநீக்குகின்ற கதி விசேடத்தையுடைய குதிரையின்மேல்;‘’உள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான” (தொல்.கற்பு. சூ. 53); ‘’மானுருவாகநின் மனம்பூட் டினையோ”(அகநா. 384 : 10); பகைவருடைய ஊக்கத்தை ஒழித்தற்குக்காரணமான சுழற்சியையுடைய குதிரை யென்றலுமாம். 3 - 4. கூர்த்த எஃகமெனக் கூட்டுக;எஃகம் - வேல். 5. ஆட்டி - அசைத்து ; திரித்தென்றுமாம்.காணிய வரும் - காணும் பொருட்டு வருவான். நெருநை - நேற்று. 6. உரைசால் - புகழ் அமைந்த; “உரைசால்சிறப்பி னரைசுவிழை திரு”, ‘’உரைசால் சிறப்பின்,மன்னன் மாறன்” (சிலப். 2 : 1, 8 : 5 - 6 ) 7. திமிலின் - தோணிபோல.போழ்ந்து - படையைப் பிளந்து; புறநா. 299 : 3. 8. கயந்தலை - மெல்லிய தலை; ‘’கன்றுடைமடப்பிடிக் கயந்தலை மண்ணிச், சேறுகொண் டாடிய வேறுபடுவயக்களிறு” (அகநா. 121 : 5 - 6); ‘’கயந்தலை மடிப்பிடி” (அகநா.165, 202; மலைபடு. 307; கலித். 23: 10) ‘கய’ என்னும் உரிச்சொல் மென்மையைஉணர்த்துதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி.சூ. 26, சே. 8 - 9. அவ்வரசருடைய பெண் யானைகள்துணையிழப்ப விளங்கு கின்ற கொம்பினையுடையகளிற்றி யானைகளைக் கொன்ற என்பொருட்டு; புலம்ப- வருந்தவென்னலுமாம்; ‘’புல்லார் பிடி புலம்ப” முத். 28. (303)
|