திணை - அது; துறை - தாபதநிலை. ...............ஒக்கூர் (பி - ம். எக்கூர்) மாசாத்தனார்பாடியது. தாபதநிலையாவது:- ‘’குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக் கருந்தடங் கண்ணி கைம்மைகூறின்று” (பு. வெ.257) (இ - ள்.) இரங்கத்தக்கன,சிறிய வெளிய ஆம்பல்; அவைதாம், யாம் இளையேமாயிருக்கமுற்காலத்துத் தழையாயுதவின; இக்காலத்துப் பெரியசெல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக உண்ணுங்காலைமாறி இன்னாத வைகும்பொழுதின்கண் உண்ணும் தம் அல்லியிடத்துண்டாம்புல்லரிசியாய் உதவின-எ - று. தாம் இன்புறுங்காலத்தும்துன்புறுங்காலத்தும் துணையாய் உதவின வாதலான், அளியவாயினவெனஆம்பலைநோக்கிக் கூறியவாறாயிற்று. 1 நெல்லலாவுணவெல்லாம்புல்லென்றல் மரபு. |