(கு - ரை.) 1. இவளென்றது, கோலஞ்செய்துமகனைப் போர்க் கனுப்புந் தாயை. 2. மூதின் மகளிர் - முதிய மறக்குடியிற்பிறந்த மகளிர்; புறநா. 19 : 15; மறக்குடியை மூதிலென்றது,“கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு,முற்றோன்றி மூத்த குடி” (பு. வெ. 35) என்பவாகலின். 3. தன்னை - தமையன். 8. வெளிது - வெள்ளிய ஆடை; புறநா.286 : 5, 291 : 2. 9. பாறுமயிர் - விரிந்த மயிர்; புறநா.374 : 3. 10. “ஒருமைந்தன் றன்குலத்திற்குள்ளானென் பதுமுணரான்” பெரிய. திருவாரூர்ச். மு. “கன்னின்றான்...ஏறு” (பு.வெ. 176) வெட்சித்திணைத்துறைகளுள், மறங்கடைகூட்டியகுடிநிலை மகளிர் இயல் கூறியதற்கும் (தொல்.புறத்திணை. சூ. 4, இளம்.) ‘வாள்வாய்த்துக் கவிழ்தல்’என்பதற்கும் (தொல். புறத்திணை. சூ. 5, ந.) மேற்கோள். (279)
1 “வந்த படைநோனாள் வாயின்முலைபறித்து, வெந்திற லெஃக மிறைக்கொளீஇ - முந்தை, முதல்வர்கற் றான்காட்டிமூதின் மடவாள், புதல்வனைச் செல்கென்றாள்போர்க்கு” (பு. வெ. 175)
|