(கு - ரை.) 1. விரைவில் வருக, விரைவில்வருகவென்று; “வருகதில் லம்மவெஞ் சேரி சேர” (அகநா.276 : 7) ‘வருகதில்’ : நன். வி. சூ, 420, மேற். 2. தூது - தூதர். 1 - 2. சிறந்த வீரனைத் தமக்குத் துணையாகவரும்வண்ணம் அரசர் அழைத்தல் இந்நூல் 122-ஆம் பாடலாலும்விளங்கும். 3. நூலரிமாலை - நூலை அரிந்து கட்டியமாலை. காலின் - கால்களால்; காற்றைப்போலென்றுமாம். 3 - 4. ஊர்தியின்றித் தனியே வந்தமறவன். மூதில் - மறக்குடி. 1 - 4. ‘வருகதில்வல்லே...வந்த இதுகாலங்குறித்தது’ (தொல். இடை. சூ. 5, ந.) 5. தடுத்தற்கரிய போரைத் தடுத்து. 6. “தானால் விலங்காற் றனித்தாற்பிறன்வரைத்தால், யானையெறித லிளிவரவால் -யானை, ஒருகை யுடைய தெறிவலோ யானும், இருகை சுமந்துவாழ்வேன்” (தொல். புறத்திணை. சூ. 5, ந. மேற்.) 6 - 7. ஒருகையிரும்பிணத்தெயிறு -இறந்த யானையின் கொம்பு. மிறையாகத் திரிந்தவாள்- வளைவாக வேறுபட்ட கத்தியை; திருத்தா - திருத்தி;“புண்ணிடங் கொண்ட வெஃகம் பறித்தலிற் பொன்னனார்தம்,கண்ணிடங் கொண்ட மார்பிற் றடாயின காது வெள்வேல்,மண்ணிடங்கொண்ட யானை மணிமருப் பிடையிட் டம்ம,விண்ணிட மள்ளர் கொள்ள மிறைக்கொளீஇத்திருத்தி னானே” (சீவக. 284); “வெந்திற லெஃக மிறைக்கொளீஇ”(பு. வெ. 175) 8. தனக்குத் தோற்றோடியவனது முதுகைநோக்கிச் சிரிப்பான்; “போர்தொலைந்திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல்” (கலித்.120 : 14) தாங்கித் (5) திருத்தா (7) நகுமென்க(8) மு. வஞ்சித்திணைத்துறைகளுள்,‘அழிபடைதட்டோர் தழிஞ்சி’ என்பதற்கும் (தொல்.புறத்திணை. சூ. 7, இளம்.), ‘வருவிசைப் புனலைக்கற்சிறைபோல, வொருவன் றாங்கிய பெருமை’ என்பதற்கும்(தொல். புறத்திணை. சூ. 8, ந.) ‘திறப்பட வொருதான்மண்டிய குறுமை’ என்பதற்கும் (தொல்.புறத்திணை. சூ. 12, ந.) மேற்கோள். (284)
|