(பி - ம்.) 2 ‘ஒருவ னோட்டும்’ திணையும் துறையும் அவை.
1 ஓரேருழவர் (பி - ம். ஒன்னாருழவர்) பாட்டு. (இ - ள்.) தோலைப் புடைத்துவைத்தாற்போன்றநெடிய வெளிய களரின்கண் ஒருவன் அலைக்கும்புல்வாய் எளிதின் ஓடிப் பிழைக்குமா போலே யானும்நன்னெறிக்கண்ணேயொழுகிப் பிழைக்கவுங்கூடும்;சுற்றத்தோடு கூடிவாழும் இல்வாழ்க்கை அதன்கட் செல்லவொட்டாதுகாலைத் தளையாநிற்கும்; ஆதலான் உய்தல் கூடாது-எ -று. மன் : கழிவின்கண் வந்தது. மா :அசைநிலை. |
(கு - ரை.) 2. புல்வாய் - மான். 4. “உலோகமா பாலன்”, “அநங்கமாதிலகன்”(சீவக. 385, 2001) என்னுமிடங்களில், ‘மா, வியங்கோளசையன்றிஇசைநிறைத்து நின்றது’ எனக்கூறி இவ்வடியை மேற்கோள்காட்டுவர்நச்சினார்க்கினியர்; ‘மா’ என்பது முன்னிலையசையன்றிஅசைச்சொல்லாக வந்ததற்கு மேற்கோள்; (தொல்.இடை. சூ. 47, ந.; இ - வி. சூ. 275, உரை.) 1 - 4. “காட்டகத் தொருமகன் றுரக்குமாக்கலை, யோட்டுடைத் தாமெனி னுய்யு நங்களை, ஆட்டியிட்டாருயி ரளைந்து கூற்றுவ, னீட்டிய விளைமதுப் போலவுண்ணுமே” (சீவக. 2930) (193)
1 “ஓரே ருழவன் போல” (குறுந்.131)
|