(கு - ரை.) 1. மறவீர் - வீரர்களே. நும்மை : உருபுமயக்கம். 2. ஊர்க்குறுமாக்கள் : புறநா. 94 : 1, குறிப்புரை; கலித். 82 : 9. 4. கராம் - முதலை விசேடம்; இதனை, "கொடுந்தாண் முதலையு மிடங்கருங் காரமும்" (257) என்னும் குறிஞ்சிப்பாட்டாலும் அதன் உரையாலும் உணர்க. என்னை : புறநா. 78 : 2, குறிப்புரை. 3 - 4. "உரவுக்களிறு கரக்கு மிடங்க ரொடுங்கி" (மலைபடு. 211) 1 - 4. "என்னை முன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை, முன் னின்று கன்னின் றவர்" (குறள், 771). 6. ஆடு - வென்றி. மறவர்களை நோக்கிக் கூறியதுபோலத் தலைவனது வென்றி கூறிய வாறு. (104)
1.குறள், 495.
|