(கு - ரை.) 1. அதிரல் - புனலிக்கொடி;முல்லை. 51; குறிஞ்சிப். 75; மோசி மல்லிகை,காட்டுமல்லிகை; சிலப். 13: 156. 1 - 3. “கொய்குழை யதிரல் வைகுபுலரலரி, சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி” (அகநா.213: 4 - 5) 4. புதிய அகலிடத்திற்கொண்டபுலியினது கண்போன்ற நிறத்தை யுடைய சூடான உணவு;வெப்பர் = வெவ்வர் - வெம்மை; பதிற். 41: 20. 6. புறநா. 262: 2; உவலைக்கண்ணி -தழைவிரவித் தொடுத்தமாலை. 7. பிழி மகிழ் வல்சி - பிழிந்தெடுத்தமதுவாகிய உணவு. 8. என்ப - அசைநிலை. கள்ளின்வாழ்த்தல்: புறநா. 316: 1. 9. கரந்தை - ஒருவகைப் புதற்பூ; இப்பூவாற்றொடுத்த மாலையை நிரைமீட்போர் சூடுவது மரபு. வாள (12) கொள்ளாயென (8) முடிக்க. (269)
1 இதுமுதற் பின்வரும் பாடல்களுக்குஉரை அகப்படவில்லை; சில பாடல்கள் இடையிடையே சிதைந்தும்பொருளின் உண்மை காணக் கூடாதவண்ணம் பிறழ்ந்தும்போயிருக்கின்றன.
|