286
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
5தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே.

(பி - ம்.) 3 ‘நீட்டிப்பண்டையெண்’5 ‘போர்ப்பித்திலனே’, ‘போர்ப்பித் திலவே’

திணை - கரந்தை; துறை - வேத்தியல்.

ஒளவையார்.


(கு - ரை.) 1. யாட்டுச்செச்சை -ஆட்டுக்கிடாய்.

2. தன்னோரன்ன - தன்னையொத்த;ஓர் : அசைநிலை.

3. மண்டை - ஒருவகை உண்கலம்; எழுவாய்.

4. கால்கழிகட்டில் - பாடை; கிடப்பி- கிடத்தி; புறநா. 93 - 8.

5. தூவெள்ளறுவை - மிக வெண்மையானஆடை; புறநா. 279 : 8, 291 : 2.

மண்டை (3) போர்ப்பித்திலதென்க(5)

மு. தொல். புறத்திணை. சூ. 8. ந. மேற்.

(286)