(கு - ரை.) 1. புறநா. 294 : 2,குறிப்புரை. 2. வெந்து - மனம்புழுங்கி. வாய்மடித்து: (புறநா. 296 : 4, 298 : 5). ‘பெயரி - பெயர்த்து;அசைத்து. 3. தோடு - சேனையின் தொகுதியை.உகைத்து - செலுத்தி; கைத்து - செலுத்தி என்றுமாம்.எழுதரூஉ - எழுந்து. ஞாட்பின் - போரில். 4. முன்வருகின்ற படையைப் பிளந்துஇடமுண்டாக விலக்கி; புறநா. 299 : 3. 5. அழுவம் - பரப்பு. “சிதைந்துவேறாகிய” (புறநா. 278 : 7) 6. சிறப்புடைமை - மறக்குடிக்கேயுரிய விசேடகுணம்; “பிறப்பொக்கு மெல்லாவுயிர்க்குஞ் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமையான்” (குறள், 972) 7. வாடுமுலை : புறநா. 276 : 2. ஊறுதல்பாலின்றொழில். 6 - 7. புறநா. 277 : 3 - 4. 8. பூட்கை - மேற்கோள் : ஓடாப்பூட்கை: “ஓடாப்பூட்கை யுறந்தை” (சிறுபாண். 83) 5 - 8. “செங்களந் துழவுவோள் சிதைந்துவேறாகிய, படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும்பெரிதுவந் தனளே” (புறநா. 278 : 7 - 9) (295)
|