(கு - ரை.) 1. களர் - உவர்நிலம்.கூவல் - கிணறு; “பூவற்படுவிற் கூவற் றோண்டிய” (புறநா.319) 2. புலைத்தி - வண்ணாத்தி: “உடையோர்பான்மையிற் பெருங்கை தூவா, அறனில் புலைத்தி” (நற்.90 : 2 - 3); “நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்,தலைப்புடை போக்கித் தண்கயத் திட்ட, நீரிற்பிரியா” (குறுந். 330); “ஆடைகொண் டொலிக்குநின்புலைத்திகாட் டென்றாளோ” (கலித். 72 : 14);“பசைகொன் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி”,“பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைந் தூட்டிய, பூந்துகில்”(அகநா. 34 : 11, 387 : 6 - 7). தூவெள் ளறுவை - மிக வெள்ளியஆடை; “தூவெள்ளறுவை போர்ப்பித் திலதே” (புறநா.286 : 5) 3. தாதெருமறுகு - எருப்பொடிகளையுடையவீதி; “தாதெரு மறுகிற் பாசறை” (புறநா. 33 : 11) 2 - 3. அறுவை அழுக்குண்ணும்படி இருந்து. 4. குறை - காரியம். 5. உதவி செய்தற்கு ஒருவருமில்லை. 7.தோல் - கேடகம். தலைவனது ஆற்றல் கூறியதனாற்பாண்பாட்டாயிற்று. (311)
|