(கு - ரை.) 3. மடவர் - அறிவில்லார்;புறநா. 106 : 4. நெடுமானஞ்சி: ஒரு தலைவன். 2 - 3. கடவர் - படைவீரர் முதலியோர்.மீதும் - மேற்பட்டும். ஈயும் அஞ்சி. ‘மடவர் மகிழ்துணை’என்பது, “பாணரொக்கல்” (திருச்சிற். 400)என்பது போல்வது. 4 - 5. அவன் வீட்டின் இறப்பிற்செருகப்பட்ட தீக்கடை கோலைப் போலத் தன்வலிவெளிப்பட வேண்டாத காலத்து அடங்கியிருக்கவும் வல்லன். 5 - 7. ஞெலிகோலாலே கக்கப்பட்டுத்தோன்றுகின்ற காட்டுத்தீயைப்போல வெளிப்படத்தோன்றவேண்டிய காலத்துத் தோன்றவும் வல்லன். (315)
|