367
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினுந் தம்மொடு செல்லா
வேற்றோ ராயினு நோற்றோர்க் கொழியும்
ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்
5பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந்
திரவலர்க் கருங்கல மருகாது வீசி
வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்
10வாழச் செய்த நல்வினை யல்ல
தாழுங் காலைப் புணைபிறி தில்லை
ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்
15யானறி யளவையோ விதுவே வானத்து
வயங்கித் தோன்று மீனினு மிம்மென
இயங்கு மாமழை யுறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நாளே.

(பி - ம்.) 2 ‘யாயினுநதமவேயனறி’ 3 ‘வேற்றா’ 7 ‘தெறறவாது நனமகிழநது’, ‘தெறறநாணமகிழதூங்குநது’

10’நாலவினை’ 11 ‘காலத்துத் துணைபிறிது’, ‘காலைத்துணைபிறி’ 14 ‘நீள்குடை’, ‘வேந்தர்’ 15 ‘விவவெ’ 16 - 7 ‘இமமெனபபரநதியங்குமாமழை’ 18 ‘தொணடுமபொலிக’

திணை - பாடாண்டிணை; துறை - வாழ்த்தியல்.

சேரமான் மாரி வெண்கோ (பி - ம். வெள்கோ) வும், பாண்டியன் கானப்பேர் தந்த (பி - ம். கடந்த)உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார்.


(கு - ரை.) 1. நாகம் - தேவலோகம் ; பவணலோகமுமாம்; தக்கயாகப் பரணியில், "மலைநாக மார்பர்" (510) என்னும் தாழிசைக்கு இவ்வடி மேற்கோள். பாகு - பகுதி. மண்டிலம் - நாடு.

2. தம - தம்முடையன.

3. நோற்றோர்க்கு ஒழியும் - தவஞ்செய்தோர்க்கே உரியனவாகும்.

4. ஏற்ற - யாசித்த. ஈர்ங்கை - குளிர்ந்த கை ; புறநா.258 : 5, 393 : 10. 5. புனல் - தாரை நீர்.

4 - 5. "அந்தணர்க், கருங்கல நீரொடு சிதறி" (புறநா. 391 : 4 - 5)

7. நாரரி தேறல் - பன்னாடையால் வடிக்கப்பட்ட கள்ளின் தெளிவை; புறநா. 170 : 12, குறிப்புரை.

6 - 7. "ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்து" (புறநா.24 : 31 - 2)

8. "பரிசிலர்க் கென்று, மருகா தீயும் வண்மை", "இரவலர்க், கருகாதீயும் வண்மை", "இரவலர்க் கருகாது கொள்ளென விடுவை" (புறநா.320 : 16 - 7, 329 : 7 - 8, 359: 15 - 6)

9. மதுரைக்.781 - 2; "தெரிகோதை யந்நல்லாய் தேறீயல் வேண்டும்" (கலித்.98 : 9)

‘வேண்டுமென்பது உம்மீற்றான் வந்ததோர் ஏவல் கண்ணிய வியங்கோள்; வாழ்தல்......வைகல்’ சீவக. 201, ந,; தொல். வினை. சூ. 29, ந,; இ. வி.சூ. 46, 50, 239, உரை, மேற்.

12 - 3. "அந்தண ரருங்கட னிறுக்கு, முத்தீ" (புறநா.2 : 22 - 3) என்பதையும் அதன் குறிப்புரையையும், "ஒன்றுபுரி கொள்கை யிருபிறப்பாளர், முத்தீச் செல்வத்து" (சிலப்.23 : 67 - 8) என்பதையும் பார்க்க.

13. காண் தக - அழகுதக.

14. கொற்றம் - அரசவுரிமை.

16 - 8. "இமயத்தீண்டி யின்குரல் பயிற்றிக், கொண்டன் மாமழை பொழிந்த, நுண்பஃ றுளியினும் வாழிய பலவே" (புறநா.34 : 21 - 3); புறநா.371 : 24 - 5.

(367)