(கு - ரை.) 1. இவ் - இவை; என்றது தொண்டைமான் ஆயுதங்களை. வேலுக்குப் பீலி அணிதல் : "தொடையமை பீலிப் பொலிந்த கடிகை, மடையமை திண்சுரை மாக்காழ்வேல்" (அகநா. 119 : 12 - 3) 2. காழ் - காம்பு. 3. புறநா. 272; 4; "கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்" (நெடுநல். 49) 5. கொல்துறை - கொல்லனது துறை. "அழலவாய்க் கிடந்தவை வேல்" (சீவக. 1865) என்பதற்கு, 'கொல்லனுலையை விரும்பின வேல்' என்று பொருள்கூறி 'கொற்றுறைக் குற்றில' என்பதனை மேற்கோள் காட்டினர் நச்சினார்க்கினியர். 8. "கற்றவர் நற்றுணை பாண ரொக்கல்" (திருச்சிற். 400) மு. வாகைத்திணைத்துறைகளுள், 'பெரும்பகை தாங்கும் வேல்' என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 17, இளம்; சூ. 21, ந. அதிகமானுடைய படைக்கலத்தைப் புகழ்ந்து கூறினமையால் இது வாண்மங்கலமாயிற்று. (95)
1."இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற், குறுதி பயப்பதாந் தூது" (690) என்னும் குறளின்படி தம்முடைய அரசனது மேம்பாட்டை வேற்று வேந்தனிடத்து ஒளவையார் இச்செய்யுள் வாயிலாக எடுத்துக் கூறியவன்மை மிகவும் பாராட்டற்பாலது. 2.தண்டி. சூ. 64.
|