(பி - ம்.) 5 ‘யானும்’ திணையும் துறையும் அவை. மூவேந்தரும் பறம்புமுற்றியிருந்தாரை அவர் பாடியது. (இ - ள்.) வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையினையுடைய மூன்று திறத்தீருங் கூடிப் பொருதீராயினும் பறம்பு கொள்ளுதற்கு அரிது; முந்நூறு ஊரையுடைத்து, குளிர்ந்த நல்ல பறம்புநாடு; அம்முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்; நீயிர் பாடினிராய் வரின், நுமக்கு யாமும் பாரியும் உள்ளேம்; அதுவேயன்றி மலையும் உண்டு-எ - று. நீர் பாடிவரினும் பறம்புநாடு பரிசிலர் முன்னேபெற்றமையின், அது நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக் கொள்க, |