திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) இரங்கத்தக்கது, பெரிய கரிய குன்றம்; அது வேலான் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது; நீலத்தினது இணைந்த மலரையொக்கும் மையுண்ட கண்ணையுடைய கிணையையுடைய விறலிக்கு எளிது, பாடினளாய் வரின்-எ - று. அளிதோவென்றது ஈண்டு வியப்பின்கண் வந்தது. பாடினளாய்வரினென்றகருத்து: அவட்கும் அவ்வாறன்றித் தன் பெண்மையால் மயக்கி வென்றுகோடல் அரிதென்பதாம். |