(கு - ரை.) 1. "தலைப்பெய றலைஇய" (முருகு. 9) 2. தெறுழ் - கார்காலத்து மலர்வ தொருகொடி. களிற்றுமுகவரி: நற். 176 : 5; கலித். 44 : 5; அகநா. 349 : 11 - 2. தெறுழ்வீ: "அரும்பவிழ்ந், தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன" (கார்நாற்பது, 25); "நறைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ" (நற். 302) 3. "சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர், இதைப்புன வரகி னவைப்புமா ணரிசியொடு, கார்வாய்த் தொழிந்த வீர்வாய்ப் புற்றத், தீயல்பெய் தட்ட வின்புளி வெஞ்சோறு" (அகநா. 394 : 2 - 5). செம்புற்றீயல்: புறநா. 51 : 9 - 10, குறிப்புரை. 4. புறநா. 120 : 16. 5. "அழன்மண்டு போழ்தி னடைந்தவர்கட் கெல்லாம், நிழன் மரம்போ னேரொப்பத் தாங்கி" (நாலடி. 202); 'அருஞ்சுரத்தின் மரம் போல் அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு' (சீவக. 3, ந.); "ஆதபத்துக்கருநிழல் போலருள், வேத வித்தக வீரன்" (வி. பா. அருச்சுனன்றவநிலை. 6) (119)
|