திணை - அது; துறை - பொருண்மொழிக்காஞ்சி. மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது. (இ - ள்.) ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைந்து நான்கு திசையினுமுள்ள பரிசின்மாக்கள் பலரும் வருவர்; அவர் வரிசையறிதல் அரிது; கொடுத்தல் மிகவும் எளிது; பெரிய வண்மையை யுடைய தலைவ! நீ அவ்வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின், அறி வுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக- எ - று. |
(கு - ரை.) 2. பரிசின் மாக்கள் : புறநா. 6 : 16, 24; 30. 3. வரிசை : புறநா. 6 : 16; 47 : 6; "வரிசை யறிதலும்" (சிறுபாண். 217); "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அது நோக்கி வாழ்வார் பலர்" (குறள், 528); "தத்தம், வரிசையா னின்புறூஉமேல்" (நான்மணிக். 67) 5. மு. புறநா. 35 : 30. மு. பாடாண்டிணைக்குரிய விடைகள் பலவற்றுள், சிறிதென்ற விடைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந. (121)
|