(கு - ரை.) 1. "துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல், இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்" (மலைபடு. 463 - 4). நாண்மகிழ் : புறநா. 29 : 5, குறிப்புரை. 2. ஈதல்லே : விகாரத்தால் லகரவொற்று விரிந்தது. 4. இழையணிதேர் : புறநா. 359 : 15; குறுந். 345 : 1; கலித். 99 : 7. தேர்தருதல் ; புறநா. 114 : 6, குறிப்புரை. 5. முள்ளூர் மலையனுடைய தென்பது, "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையனது" (நற். 170), "முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன், முள்ளூர்க் கானம்" (குறுந். 312), "முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி" (அகநா. 209) என்பவற்றாலும் விளங்கும். 6. புறநா. 34: 20 - 23; குறிப்புரை. 5 - 6. புறநா. 125 : 18 - 9. (123)
|