7
களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
5 மாமறுத்த மலர்மார்பிற்
றோல்பெயரிய வெறுழ்முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலி னல்ல
10 இல்லவா குபவா லியறேர் வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே.

(பி - ம்.) 3 ‘கணைக்கால் பொருத’ 7 ‘மென்னாய்’

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை;மழபுலவஞ்சியுமாம்.

சோழன் கரிகாற் பெருவளத்தானைக்கருங்குழலாதனார் பாடியது.

(இ - ள்.) களிற்றைச்செலுத்திய தாளையும், வீரக்கழலுரிஞ்சியஇலக்கணத்தாற்றிருந்திய அடியினையும், அம்பொடுபொருது (பி - ம்.. பொருத) இடக் கவிந்த வள்ளியகையுடனே கண்ணிற்கு விளங்கும் அழகினையுடையவில்லையும், திருமகள் பிறர்மார்பை மறுத்தற்குஏதுவாகிய பரந்த மார்பினையும்,யானையைப்பெயர்த்த மிக்க வலியினையுமுடைய,பகலுமிரவும் எண்ணாது பகைவரது ஊரைச் சுடுகின்றதீயினது ஒளியின்கண்ணே தம்சுற்றத்தைஅழைத்தலுடனே அழுகின்ற கூவுதலை யுடைய ஆரவாரத்தோடுகூடிய கொள்ளையை விரும்புதலுடையை; ஆதலான், நல்லபொருள்கள் இல்லையாகுவனவால்; இயற்றப்பட்டதேரையுடைய வளவ! குளிர்ந்த நீர்பரந்த ஓசையையுடையஉடைப்புக்களை மண்மறுத்தலான் மீனாலடைக்கும்புதுவருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடையமாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் - எ - று.

திருந்தடி (2) என்பதற்குப் 1பிறக்கிடாத அடியெனினும் அமையும்.

கணைபொருது (3) என்றது, அதனொடுமருவுதலை.

தாளையும், அடியையும், கையுடனேசாபத்தையும், மார்பையும், முன்பையுமுடைய வளவ! நீகொள்ளைமேவலையாதலின், யாணரையும்வைப்பினையுமுடைய பிறர்நாடு, நல்ல இல்லவாகுபவெனக்கூட்டுக. நாடு நல்ல இல்லவாகுபவெனஇடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்து மேலேறிநின்றது.

இனித் தாளாலும் அடியாலும்கையாலும் சாபத்தாலும் மார்பாலும் முன்பாலும்கொள்ளைமேவலையாகலினென ஆலுருபுவிரித்துரைப்பினும் அமையும்.

இது, பிறரகன்றலைநாடு நல்லஇல்லவாகுப வென்றமையிற் கொற்றவள்ளையும, ஊர்சுடுவிளக்கத்து அழுவிளிக் கம்பலையென்றமையின் மழபுலவஞ்சியுமாயிற்று.


(கு - ரை.) 1. மு. பதிற். 70 : 1.

5. மாவென்பது இடத்தால் திருவைவிளக்கியதென்பதற்கு இது மேற்கோள்; நன்.மயிலை. சூ. 389; நன். வி. சூ. 390; இ. வி. சூ. 320.உரை.

6. எறுழ் முன்பு : ஒருபொருட்பன்மொழி.

12. செறுக்கும் - அடைக்கும்; “செறுத்தோறுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்” (நாலடி. 222)

மு. ‘இப்பாட்டினைவஞ்சித்திணைக்குரிய எரிபரந்தெடுத்தலென்னுந்துறைக்கு உதாரணமாகக் காட்டினர்; தொல். புறத்.சூ. 8, ந. (7)


1. பிறக்கு - பின்; “நசைபிறக்கொழிய” (புறநா. 15 : 15)