(கு - ரை.) 1. புரவலர் - பாதுகாப்போர். 2. மரந்தலை - இங்கே மரத்தின் கீழிடம். 3. அலரிப் பூவை நாராற்றொடுத்து. 4. பித்தை - தலைமயிர். 3 - 4. "அலரி, சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி" (அகநா. 213 : 4 -5), "தாமரை, சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி" (பொருந. 159 - 60), "தாமரை, நீடிரும் பித்தை பொலியச் சூட்டி" (பெரும்பாண். 481 - 2) 5. தகைத்த - கட்டிய. கலப்பை - சமைத்தற்குரிய கருவிகளையடக்கிய பை ; "காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை" (புறநா. 206 : 10). முரவு - சிதைவு ; "முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி" (பெரும்பாண். 99) 6. ஆடு - சமைத்தல். குழிசி - பானை. பாடின்று - கெடாதபடி. 7. மன்றம் - பொதுவிடம் ; "மன்றவேம்பு" (புறநா. 76 : 4, 79 : 2). உறைப்ப - உதிர. 8. குறை - காரியம். 9. ஆரிடை நீந்தி - அரிய இடங்களைக் கடந்து. 10. படை - படைவாள் ; பாரை. மிளிர்ப்ப - கீழ்மேலாகப் புரளச் செய்ய. 12. உரைசால் - புகழ்மிக்க. 13. வில்லேருழவின் - வில்லை ஏராகக்கொண்டு உழுதலையுடைய ; உழவன் - வீரன்; "வில்லே ருழவர்" (குறள், 872) ; "மாரி வளம் பெறா வில்லே ருழவர்" (சிலப். 11 : 210) 14. குறைத்தலைப் படுபிணன் - கவந்தம். போர்பு - போர் ; புறநா. 370 : 15. 15. யானையாகிய உழும் எருது. 14 - 6. "படுபிணப் பல்போர் பழிய வாங்கி, எருதுகளி றாக வாண்மட லோச்சி, அதரி திரித்த வாளுகு கடாவின்" (புறநா. 370 : 15 - 7) 17. "மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி", "மாக விசும்பின் வெண்டிங்கண்,.........கடனடுவட் கண்டன்னவென், னியம்" (புறநா. 393 : 20, 400 : 1 - 4) 18. ஆகுளி - சிறுபறை; "நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி" (புறநா. 64 : 1). தொடாலின் - கொட்டுதலுடன் ; "துடிக்கண் புலையன் றொடும்" (பு. வெ. 62) 17 - 8. தடாரியின் கண் அதிர. 19. பணை - ஒருவகைப்பறை. மருள் : உவமவுருபு; புறநா. 368 : 17. 20. புறநா. 368 : 11, 369 : 27, 370 : 21. வந்திசின் - வந்தேன். "முகவைபாடுதல் - பொலிபாடுதல் ; ‘முகவை என்றார், நெல்லு முகந்து கொடுக்கப்படுதலாலே ; புகர்முக முகவை போல" (சிலப். 10 : 137, அரும்பத.) நீந்தி (9) வந்திசிற் பெரும (20) 22. விழுக்கு - ஊன்விசேடம் ; "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன, நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை", "கொழுநிணங்கிழிப்பக், கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த, மூடைப் பண்ட மிடைநிறைந் தன்ன, வெண்ணிண மூரி" (புறநா. 125 : 1 - 2, 393 : 11 - 4) என்பவற்றையும், "விழுக்கொடு வெண்ணஞ்சு" (சீவக. 1584) என்பதையும், ‘விழுக்கும் வெண்ணஞ்சும் ஊன்விசேடம் : வெண்ணஞ்சு - நிணமுமாம்’ என்னும் அதன் விசேடவுரையையும் பார்க்க. 23. "குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்", "குடர்த்தொடர் மாலை சூழாது" (மணி. 15 : 13, 25 : 72). உணத்தின : "உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்" (புறநா. 166 : 30) 24 - 5. புறநா. 367 : 16 - 8. 26. உரு - அச்சம். 27. "அஞ்சுவரு கிடக்கைய களங்கிய வோயே" (புறநா. 370 : 27, 373 : 39) 21 - 7. பின்றேர்க்குரவைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். புறத்திணை. சூ. 17, இளம்.; 21, ந. மேற். (371)
|