(கு - ரை.) 1. புள் - கோழிச்சேவல் ; பறவைப்பொதுவுமாம் ; “வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும், உயர்சினைக் குடம்பைக் குரற்றோற்றினவே” (புறநா. 397 : 1 - 2) 4. பாடு - ஓசை. 5. வறன் - வறுமை. 6. நீலநிறமுள்ள கந்தையை நீக்கி. 7. வெளியது - வெள்ளாடையை. 8. காவிரியென்றது இங்கே அரிசிலாற்றை. படப்பை - தோட்டம். 9 - 10. அம்பர் - சோழநாட்டிலுள்ளதோர் ஊர். அருவந்தை - ஓர் உபகாரி ; “கற்ற நாவினன் கேட்ட செவியினன், முற்ற வுணர்ந்த மூதறிவாளன், நாகரிக நாட்டத் தாரிய னருவந்தை”, “நாடே பிறர் நாட்டிற்குவமை யாறே, காலமறிந் துதவுங் காவிரி தானே, ஆடவர் திலக னம்பர் மன்ன, னீடிசைத் தலைவ னருவந்தை”, “வருநற் கங்கை வடதிசைப் பெருமையும், தென்றிசைச் சிறுமையு நீக்கிய குறுமுனி, குண்டிகைப் பழம்புனற் காவிரிப் பெரும்பதி, அம்பர்க்கதிபதி (திவாகரம்) என்பவற்றிற் காவிரியும் அம்பரும் அருவந்தையும் பாராட்டப்பெற்றிருத்தல் காண்க. (385)
|