(கு - ரை.) 3. போரில் தோற்றுமீண்டனனென்று. 4. மண்டமர்: புறநா. 213: 1. 5. சினைஇ - சினந்து. 2 - 5. ‘நின்மகன் படையழிந்து......சினைஇ; என்பதுகுடிகோள் பற்றிவந்த வெகுளி, என்னை? தன்மகன் மறக்குடிக்குக்கேடு சூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின்’ (தொல்.மெய்ப்பாடு. சூ. 10, பேர். இ. வி. சூ. 578, உரை) 6. பெயரா - பெயர்த்து: புரட்டிப் பார்த்து. 7. புறநா. 295: 5; செங்களம் - உதிரத்தாற் சிவப்பாகியபோர்க்களம்; “செங்களம் படக்கொன்று” (குறுந்.1). துழவுதல் - கையால் தடவுதல். 6 - 7. படுபிணம் நீங்காத போர்க்களத்தைச் சூழ்பவளென்றுமாம்;துழவல் - சூழவருதல். “மாதிரந் துழவுங், கவலை நெஞ்சத்து”(புறநா. 174 : 21 - 2) 9. புறநா. 277 : 3 - 4, குறிப்புரை. 8 - 9. ‘ஊகாரம் பின்வரும் தொழிற்கு இடையின்றிவிரைவு உணர்த்தி முன்வருந்தொழிலின்மேல் இறந்தகாலம்பற்றிவரும்’ (தொல். வினை. சூ. 33, தெய்வச். (தொல்.வினை. சூ. 31, ந.; இ. வி. சூ. 246, உரை); செய்யூ என்னும்வினையெச்சம் வினைமுதல் வினை கொண்டு முடிந்ததற்குமேற்கோள்; நன். சூ. 343, மயிலை.; நன். வி.சூ. 344. (278)
|