னக்கு இது மேற்கோள்; (தொல். செய். சூ. 92, ந.;) ஆசிரியத்தில் அடிமுதற்கண், ‘வடாஅது’ என உகரவீறாய நேரீற்றியற்சீர்க்கூன் அருகி வந்ததற்கு மேற்கோள்; யா. வி. சூ. 94. 2. “தெனாஅ துருகெழு குமரி யென்னுங் குறிப்பு வினைச்சொல் குறிப்பினானன்றி வினையறியலாகாமையின், வினைக்குறிப்புமொழி” (நன். மயிலை. சூ. 268) 1 - 2. “வடாஅது, தெனாஅதென்பனவும் ஏழாம்வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம்”, “வடாஅது, தெனா அதென்பன ஏழுனுருபின் பொருள்பட வந்தன” (தொல். வினை. சூ. 23. சே. ந.) 3. சகரரால் தோண்டப்பட்டமையின் கீழ்கடலைத் தொடுகடலென்றார்; “தொட்ட பைங்கடற் சூரியன் றோன்றுமுன் றோன்றி” (வி. பா. நிரைமீட்சி. 24) 4. மேல்கடல் பழையதாதலின், தொன்றுமுதிர் பௌவமெனப்பட்டது. 1 - 4. “தென்குமரி வடபெருங்கல், குணகுடகட லாவெல்லை”, (புறநா. 17 : 1 - 2; மதுரைக். 70 - 71) 7. ஆனிலையுலகம் - கோலோகம். இதனியல்பை, சிவதருமோத் தரத்துள்ள கோபுரவியலாலும், “விளங்குநம் முலகின் மேலாம் வைகுந்த மதன்மேற் கந்தன், வளங்கெழு முலகம் வெற்பின் மாதுலகதனின் மேலாம், களங்கனி யனைய கண்ட னுலகதன் மேலாம் பாங்கர், உளங்கவர் வனப்பின் மேவுங் கோவின துலக மாமே” (காசிகாண்டம், 2 : 29) என்னுஞ் செய்யுளாலுமுணர்க. 8. இவ்வடி அகலக்கவியைக் கொண்டோர் பெறும் பயனுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது; இ. வி. சூ. 940, உரை. 9. “வாண்ஞமற்கு” (சீவக. 251); “ஞெமன்ன், றெரிகோலன்ன” (அகநா. 349 : 3 - 4) 9 - 10. குறள், 118; “செம்பொற்றுலைத், தால மன்ன தனிநிலை தாங்கிய, ஞால மன்னற்கு” (கம்ப. மந்தரை. 19); “ஓர்வுற் றொருதிறமொல்காத நேர்கோல், அறம்புரி நெஞ்சத் தவன்” (கலித். 42 : 14 - 5) 12. ‘கடற்படை குளிப்ப மண்டி’ என்பது, பின்னின்ற மொழி முன்னே மாற்றப்பட்டதற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ.13, ந. 11 - 2. “விரிகடல் வியன்றானையொடு, முருகுறழப் பகைத்தலைச் சென்று” (மதுரைக். 180 - 81) 16. “வரிசை யறிதலோ வரிதே” (புறநா. 121 : 3); “வரிசையறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண். 217) 15 - 6. “ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர், கொள்ளாப் பாடற்கெளிதினி னீயும்” (பதிற். 48 : 5 - 6); “அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்” (பு. வெ. 16); “கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுழந்ததன் றாள்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி” (மதுரைக். 220 - 24); “பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப், புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியும்” (மலைபடு. 71 - 2) 11 - 6. “விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி, நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்” (சிறுபாண். 247 - 8) 17 - 8. “நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலை யொடுபுனைந், திறைஞ்சாச் சென்னி யிறைஞ்சிவலங் கொண்டு” (சிலப். 26 : 54 - 7.) 20. “முனிவர்.......வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப” (கந்த, சூரனரசிருக்கை. 19) 19 - 20. “பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே” (பதிற். 63 : 1) 17 - 20. இவ்வடிகள், செவியுறை வாழ்த்திற்கு மேற்கோள்: (தொல். செய். சூ. 114, பேர்.) 22. “ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக், கொள்ளை மேவலை”, “ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை”, “வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், கனையெரி யுரறிய மருங்கும்” (புறநா. 7 : 8 - 9, 16 : 17, 23 : 10 - 11); “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து, முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு”, “பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கு”, “ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப” (பதிற். 15 : 1 - 2, 25 : 7, 71 : 9 - 10); “செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல, எரிமேய்ந்த கரிவறல்” (கலித். 13 : 1 - 2); “நாடுகெட வெரிபரப்பி” (மதுரைக். 126) 23. அத்தை என்னும் இடைச்சொல் முன்னிலையசையாய் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். இடை. சூ.47. தெய்வச்.; இ. வி. சூ. 276, உரை. 24. “துனிநீங்கி யாட றொடங்கு துனிநனி, கன்றிடிற் காமங் கெடூஉம்” (பரி. 6 : 97 - 8) 25. வென்று அகத்தடக்கல் : புறநா. 77 : 10 - 13. 26. “தண்டாக் களிப்பு” (மணி. 6 : 126) 29. இது, யகரவீற்றுவியங்கோளுக்கு மேற்கோள் : தொல். உயிர். சூ. 8, இளம்.; நன். மயிலை. சூ. 337; நன். வி. சூ. 338; இ. வி. சூ. 239, உரை; மன்னாமை நிலையாமையை உணர்த்துமென்பதற்கு மேற்கோள்; தொல். கிளவி. சூ. 34, ந. மு. “இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியுறையும் கூறினான், செவியுறைப்பொருள் சிறப்புடைத்தென்று அவன்கருதி வாழ்தல் வேண்டி” (தொல். புறத்திணை. சூ. 35; செய். சூ. 144, ந.) பாட்டுடைத்தலைவன் பெயரின் ஒருபகுதி இப்பாட்டின் 26 - ஆம் அடியில் அமைந்திருத்தல் காண்க. (6)
உரை. 1 கன்னியாறு : பாண்டிநாட்டைக் கன்னிநாடென்பது இதனாலும் இருத்தல் கூடும்; வேறு கூறுவாருமுளர்; திருவிளை. தடாதகைப். 61 2. படைகுடி முதலியன: குறள், 381 3. செவியறிவுறூஉ : ஒருவுதல், ஒரூஉதல் எனவும் ஒரூஉஎனவும் கூறப்படுதல்போல உறுதலும் உறூஉதலெனவும் உறூஉவெனவும் கூறப்படுமென்பர்; தொல். புறத்திணை. 35, ந.
|