திணை - அது; துறை - பரிசில்கடாநிலை. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்பாடியது. (இ - ள்.) நும்முடைய படை பகைவர்மேற்போங்காலத்து அவரது படையாகிய வேல் முதலாயவற்றைஓக்கியெறியும் படைக்கு முன்னே நிற்பை யாகலானும்,அவர்படை அடர்த்துவருங்காலத்து நும்படையினது அணியைத்தாங்கவேண்டி அகன்ற ஆற்றின்கட் குறுக்கே தடுத்துக்கிடக்கின்ற மலையையொப்ப அதனைத் தடுத்துநின்றாயாதலானும்பெரும! நின்னைக் காணலாங்காலம் பெறுதலரிது, எந்நாளும்;எனது சுற்றத்தினது இடும்பை பெரிதாதலால் நீ இப்பொழுதேஎனக்குப் பரிசில் தந்துவிடுவாயாக; வென்றிவேலையுடையஇளைய பல கோசர் விளங்கிய படைக்கலங்கற்பார்மாறுபட்டனராயெறிந்த அகன்ற இலையையுடையமுருக்காகிய பெரிய மரத்தாற் செய்யப்பட்ட தூணமாகியஇலக்கைப்போலப் பொருவார்க்குத் தொலையாதநினதுவென்றி வாழ்வதாக-எ - று. ‘எனா’ என்பன, எண்ணிடைச்சொல். ‘எளிதாலத்தை’ என்றுபாடமோதுவாரும் உளர். |
(கு - ரை.) 4 - 5. புறநா. 284, 330;“வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத், தொன்னாரோட்டிய செருப்புகன் மறவர்” (மதுரைக். 725 -6); “வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன்றாங்கிய பெருமையானும்” (தொல். புறத்திணை.சூ. 8); “பொருபடையுட் கற்சிறைபோன், றொருவன்றாங்கிய நிலையுரைத்தன்று” (பு. வெ. 54) 8. புறநா. 136 : 24. 6 - 8. புறநா.139 : 6 - 15. 9. “கோசர் - ஒருவகைவீரர்; புறநா.283, 396; “நாலூர்க்கோசர் நன்மொழி”, “ஒன்றுமொழிக் கோசர்” (குறுந். 15, 73); “மெய்ம்மலிபெரும்பூட் செம்மற் கோசர்”, “வடுவுடை முகத்தர்,கடுங்கட்கோசர்” “காப்புக்கை நிறுத்த பல்வேற்கோசர்”, “ஒன்று மொழிக் கோசர்”, “வாய்மொழிநிலைஇய சேண்விளங்கு நல்லிசை, வளங்கெழு கோசர்”,“பல்லிளங் கோசர்”, “புனைதேர்க் கோசர்”,“ஊர்முது கோசர்” (அகநா. 15, 90, 113, 196, 205,216, 251, 262); “அவையகம் விளங்க, நான்மொழிக் கோசர்”,“கடந்தடு வாய்வாளிளம்பல் கோசர்” (மதுரைக்.508 - 9, 773); “கொங்கிளங் கோசர் - குறும்புசெலுத்துவார் சிலவீரர்” (சிலப். உரைபெறு. 2,அரும்பத.) என்பவை இங்கே அறியற்பாலன. 10. முருக்கு - முள்ளு முருங்கை. 9 - 11. புறநா. 4 : 6, குறிப்புரை.; சீவக.995, ந. (169)
|