19
இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
5இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி
முயங்கினே னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத்
10தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
15மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே.

(பி - ம்.) 18 ‘கழுவிளங்’

திணை - வாகை; துறை - அரசவாகை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) ஒலிக்குங் கடலாற்சூழப்பட்ட அணுச்செறிந்த அகன்ற உலகத்துக்கண் 1தமிழப்படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண் நிலைபெற்றஉயிரதுபன்மையையும் அவ்வுயிரைக் கொள்ளுங் கூற்றினதுஒருமையையும் நின்னுடனே சீர்தூக்கிக்காட்டிய வென்றிவேலையுடையசெழிய! பெரும்புலியைப் படுக்கும் வேட்டுவன் எந்திரமறிந்துகொளுத்திய பெரிய கல்லையுடைய அடாரையும் (பி - ம்.கல்லையுடைய இடியை ஒக்கும் அடாரையும்) போலுமென்றுவிரும்பிப் புல்லினேனல்லனோயான்? கலங்கி மலைக்கண்ணேதங்கிய குருவியினம்போல அம்புசென்று தைத்த பொறுத்தற்கரியபுண்ணையுடைய யானையினது துளையையுடைய பெருங்கைவாயுடனே துணிந்து வீழ்ந்து கலப்பையையொப்ப நிலத்தின்மேலே புரள வெட்டிப் போர்க்களத்தின் கண்ணே வீழ்த்தஏந்திய வாள் வெற்றியையுடையோராய் எந்தலைவனோடுகிடந்தார்,எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்; இப்பெற்றிப்பட்டவென்றியும் உளவோ நமக்கென்று சொல்லி முதிய மறக்குடியிற்பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ, அதுகண்டுநாணிக் கூற்றம் இரங்கிய அஞ்சத்தக்க போர்க்களத்தின்கண்ணேஇருபெருவேந்தரும் ஐம்பெருவேளிருமாகிய எழுவரது நல்லவலியை வென்றோய்! நினது கழுவி விளங்கின முத்தாரம்அகத்திட்ட மார்பை. - எ - று.

தமிழ்தலைமயங்கியவென்புழி, தலை,அசைநிலை; இடமுமாம்.

செழிய! கடந்தோய்! நின்மார்பையான் விரும்பி முயங்கினே னல்லனோவெனக் கூட்டுக.

பெருங்கல்லடாருமென்ற உம்மை, எமக்குவிருப்பஞ் செய்தலே யன்றி நின்பகைவர்க்கு வருத்தஞ்செய்தலான், நின்மார்பு கல்லடாரும் போலுமென எச்சவும்மையாயிற்று;சிறப்பும்மையுமாம்.

மூதிற்பெண்டிர் கசிதலால்நாணியெனவும் அழுதலாற் கண்ணோடிய எனவும் நிரனிறையாகக்கொள்க.

போர்முடிதலாற் போயின கூற்றைநாணியும் கண்ணோடியும் போயிற்றுப்போலக் கூறியது,ஓரணி (தற்குறிப்பேற்றம்) கருதிநின்றது.

இனி, அம்பு தைத்த யானையை வெட்டிப்படுத்தல்மறத்திற்கிழி பென்று பெண்டிர் இரங்கியழுதலின்,கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோ டியதென்று உரைப்பாருமுளர்.


(கு - ரை.) 1. ‘இமிழ்’ என்பதுஒலித்தற்றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்;நன். மயிலை. சூ. 458; நன். வி. சூ. 459. கிடக்கை- பூமி; “ஞாலந்தாத்திரியளக்கர் நாடுபூ தலங்கிடக்கை”என்பது நிகண்டு.

1 - 2. “இமிழ்கடல்.......தலையாலங்கானத்துஎன்றவழித் தலையாலம் என ஆசிரியவடியுள் இன்சீர்இயைய வெண்சீர் வந்தது” (தொல். செய். சூ. 30,பேர்.; ந.)

4. பெயரெச்சத்திற்கு முடிபாகியபெயரை இடைவருஞ்சொற்கள் விசேடித்து நின்றதற்கு மேற்கோள்;தொல். எச்ச. சூ. 59, ந.

3 - 4. “எருமைக் கடும்பரி யூர்வோனுயிர்த்தொகை, ஒருபக லெல்லையி னுண்ணு மென்ப,தாரிய வரச ரமர்க்களத் தழிய, நூழிலாட்டிய சூழ்கழல்வேந்தன்”, “கூற்றுக்கண் ணோட வரிந்துகளங்கொண்டோர்”(சிலப். 26 : 215 - 8, 27 : 40)

5 - 6. தினையுண் கேழ லிரியப்புனவன், சிறுபொறி மாட்டிய பெருங்கல் லடாஅர், ஒண்கேழ்வயப்புலி படூஉ நாடன்” (நற். 119); “புழைதொறுமாட்டிய விருங்க லரும்பொறி” (மலைபடு. 194);“கொல்புலி படுக்கும் பெருங்கனீ ளடார்வெங் குறவர்வீழ்த்திடுதலும்” (கூர்ம. சம்புத்தீவின், 29); “பண்ணேறுசிறுகுதலைக் கொடிச்சியருட் பதைபதைத்து நடுங்க வெய்ய,திண்ணேறுங் கொடுஞ்சினத்த செங்கண்வாலுளைமடங்கற்சிதர்ந்து வீழ, விண்ணேறு மமரருளம் வியப்பூரக் கல்லதரின்வீழ்த்தி விண்டு, தண்ணேறு மலர்த்தொடையற்குறவருறை வாமனமாந் தகைசால் குன்றும்” (இலிங்க.பிலக்கமுதலான தீவு. 54)

8 - 9. யானையின்மேல் தைத்த அம்புகளுக்குமலைமீது தங்கிய குருவிகள் உவமை; “யானைமேல்யானை நெரிதர வானாது, கண்ணேர் கடுங்கணை மெய்மறைப்பவெவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றனவே”(களவழி. 8); “கணைமொய்ப்பக் கதஞ்சிறந்து.குருவிசேர் வரைபோன்ற குஞ்சரம்” (சீவக.2237); “கோல்பொரக் குளித்த யானை குருவிசேர்குன்ற மொத்த” (மேருமந்தர. பலதேவர். 15)

11. “உறலூறு கமழ்கடாத் தொல்கியவெழில்வேழம். வறனுழு நாஞ்சில்போன் மருப்பூன்றிநிலஞ்சேர” (கலித். 8); “பிடிவா யன்ன மடிவாய்நாஞ்சில்” (பெரும்பாண். 199. கு - ரை.)

9-12. “மின்னவி, ரோடையொடு பொலிந்தவினைநவில் யானை. நீடிர டடக்கை நிலமிசைப் புரளக்களிறுகளம் படுத்த” (நெடுநல். 168 - 71)

14. ‘இன்ன’ என்பது உவமவுருபாக வந்ததற்குமேற்கோள்; நன். மயிலை. சூ. 366.

15. மூதிற் பெண்டிர்-மறக்குடிமகளிர்;“மூதிற் பெண்டி ரோதையிற் பெயர” (சிலப்.5 : 75); “கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தேவாளோடு. முற்றோன்றி மூத்த குடி” (பு. வெ. 35)

13-6. புறநா. 278; மறக்குடிமகளிர்.தம்முடைய தந்தை முதலியவர்கள் போர்க்களத்தில்இறந்ததுகண்டு இன்புறுதல். “கன்னின்றானெந்தைகணவன் களப்பட்டான். முன்னின்று மொய்யவிந்தாரென்னையர் - பின்னின்று.


1 “தலைப்பெருஞ் சேனைத் தமிழச்சேரி”(பெருங். 3. 4 : 10 - 11) ; தமிழ்ப்படை - தமிழ் நாட்டரசர்களினசேனை; நெடுஞ்செழியனோடு பொருத பகைவரெழுவரும் தமிழ்நாட்டினராதலின்தமிழ்ப்படை யென்றார்.