(பி - ம்.) 3 ‘ பாணன் கொள்ளான்’ திணையும் துறையும் அவை. 1 ஒல்லையூர் கிழான்மகன்பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் (பி -ம்.) குடவாயினல்லாதனார்) பாடியது. (இ - ள்.) இளைய வீரர் சூடார்; 2வளையணிந்த இளையமகளிர் பறியார்; நல்லயாழ்க்கோட்டின் மெல்லவளைத்துப் பாணன் பறித்துச்சூடிக்கொள்ளான்; பாடினி (பி - ம். பாணிச்சி) சூடாள்;தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்படவீரரை எதிர்நின்று கொன்று வென்ற வலிய வேலையுடையசாத்தன் இறந்துபட்டபின்பு முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ,அவனது ஒல்லையூர் நாட்டின்கண்?- எ - று. அவனையிழந்து கொடியேனாய்வாழ்கின்ற யானேயன்றி நீயும் கொடியையாய்ப் பூக்கின்றாயோவெனஎச்சவும்மையாய் நின்றது; என்றது, பூச்சூடி நுகர்வாரின்மையிற்பயனில்லையென்றதாம். |