(கு - ரை.) 1. புறநா. 26 : 1; “கடற்குட்டம் போழ்வர் கலவர்” (நான்மணிக். 18) 1-5. புறநா. 30 : 1 - 6; நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின், அளப்பரி யையே” (பதிற். 14) 10. திருவில்-இந்திரவில்; “தேர்செல வழுங்கத் திருவிற் கோலி, ஆர்கலி யெழிலி சோர்தொடங் கின்றே” (ஐங்குறு. 428); “திருவில்வீழ்ந், தொருக்குலாய் நிலமிசை மிளிர்வ” (சீவக. 1903); “திருவிலிட்டுத் திகழ்தரு மேனியன்” (சிலப். 15 : 156; மணி. 6 : 10); “நாமவே னரபதி யுலகங் காத்த நாட், காமவேள் கவர்கணை கலந்த தல்லது, தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை, நாமநீர் வரைப்பக நலிவ தில்லையே” (சூளா. நகர. 18) 13. “பொருவார், மண்ணெடுத் துண்ணு மண்ணல் யானை, வண்டேர்த் தொண்டையர்” (குறுந். 260) 14. வயவு - வயா; கருப்பமுற்ற மகளிர்க்கு நுகரப்படும் பொருள் மேற்செல்லும் வேட்கை; அதனால் அவர்கள் புகையுண்டமண்ணையுண்பர்; “மனைபுகை யுண்ட கருமண் ணிடந்து, பவள வாயிற் சுவை காணாது” (கல்லாடம். 7); “வயாநோ யெய்தி மண்ணினை நுகர்தல் தேன்சோர், முருகவிழ் துளவத் தண்டார் முகுந்தனை மல்ல லோங்கு, திருமகள் சேருமுன்னஞ் சேர்ந்திட வேண்டு மென்ன, இருநில மங்கை முன்போ யெய்துதல் போன்ற தன்றே” (கூர்ம. கண்ணனவதரித்த. 21); “பொருதடந்தோண் மகன்பழகப் புகையுண்ட கருமண்ணும்......உவந்தருந்தும் வயாநிறைந்த” (திருவானைக்கா. கோச்செங்கணார். 171) ‘வயா’ என்னுஞ் சொல், ‘வயவு’ எனத் திரிந்துநின்று வேட்கைப் பெருக்கமாகிய குறிப்பை யுணர்த்துதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 75, சே.; சூ. 73, ந. 18. “புதுப்புள் வருதலும் பழம்புள்போதலும் பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின்கட்டோன்றிய நிமித்தம்” (தொல். புறத்திணை. சூ. 36, ந.) 19. ‘விதிர்ப்பு’ என்பது நடுக்கமாகிய குறிப்புணர்த்துமென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 20, சே.; சூ. 18, ந.; இ. வி. சூ. 281, உரை. 18-9. மணி. 12 : 94. 20. புறநா. 4 : 17 21. சீவக. 957, ந. மேற். 18-21. புட்களைப்பற்றி வந்ததற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 30, இளம். மு. “குடியோம்புதல் வருமாறு:- ‘இருமுந்நீர்.....அஞ்சும்மே’ என வரும்” (தொல். புறத்திணை. சூ. 16, இளம்.); புள்நிமித்தத்தால் பாடாண்டலைவற்குத் தோன்றிய தீங்குகண்டு அஞ்சி ஓம்படை கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந. (20)
1 இப்பொருள்பற்றியே வடமொழியிலும் ‘பூபுக்’ என்று அரசனைக் கூறுவர்,
|