(கு - ரை.) 4. போந்தை - ஓரூர். 5. கொண்டிச்சீரள் - மிகுதியான சீரையுடையவள் ; "அன்பதாய்க், கொண்டி யாயின வாறென்றன் கோதையே" (தே. திருநா. திருவாரூர். ‘கொக்கரை’ 7) 6. ஆர் - ஆத்தி. போந்தை - பனை. 5 - 6. கருஞ்சினைவேம்பு : "கருஞ்சினை, யரவாய் வேம்பு" (பொருந.143 - 4) 8. கொற்றம் - அரசுரிமை. தற்றக - தனக்குத் தக. 6 - 9. விரும்புவோர் பாண்டியன்முதலிய முடிமன்னர் மூவராயிருப்பினும் தன்னை வணங்கார்க்குத் தன்மகளை ஈவானல்லன் இவன். 10. கதிர் - நெற்கதிர். 11. உணங்குதல் - உலர்தல். கலன் - கப்பல். ஆழி - கடல். 12. எயில் - மதில். ஓரெயின்மன்னன் : அகநா.373 : 18. 10 - 12. சூழ்ந்த கழனிக்குக் கடலும் எயிலுக்குப் புறமுலர்ந்த கப்பலும் உவமம். ‘மருதநிலத்து மதிலாதல்........அகநாடுபுக்கவரருப்பம் வௌவி எனப் பாட்டிற்கூறியவாற்றானும், பிணங்குகதிர்க் கழனி........ மன்னனென்றமையானும்......உணர்க’ (தொல். புறத்திணை. சூ. 9, ந.) (338)
|