(கு - ரை.) 1 - 2. “பொன்வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின், இன் குரற் சீறியாழ்”(சிறுபாண். 34 - 5); “பொன்வார்ந் தன்ன புரியடங்குநரம்பிற், றொடையமை கேள்வி” (பெரும்பாண். 15 -6); “பொன்வார்ந் தனயாழி னரம்புளர்ந்து” (பாகவதம்,10. கோவத்தன. 39); கலித். 33 : 23. 1 - 3. பொற்கம்பியினை ஒத்த முறுக்குஅடங்கின நரம்பினையும், மின்னலை ஒத்ததோலினையும் மிஞிறென்னும் வண்டுச்சாதியின் குரல்போன்ற ஓசையையுமுடைய சிறிய யாழ்க்கல்வியின் நன்மைநிறைந்த விருப்பம் வந்த பாண! 4. சீறூர் மன்னன் - குறுநிலமன்னன்.எஃகம் - வேல்; எழுவாய். 5. வேந்தன் ஊருகின்ற. ஏந்துமுகம் -எடுத்தமுகம். 4 - 5. எஃகம் முகத்தது: “வேந்தூர்யானைக் கல்ல, தேந்துவன் போலான்ற னிலங்கிலைவேலே” (புறநா. 301 : 15 - 6) 6 - 7. அரசன் கோபித்தெறிந்த வேல்என் தலைவனது சந்தனம் பூசிய மார்பினுள்ளே சென்றது;புறநா. 63 : 9. 8 - 9. நம் பெருவிறல், தன்மார்பின் உட்சென்ற அவ்வொளி பொருந்திய வேற்படையைப்பறித்து எடுத்துச் செலுத்தி ஓட்டிய காலத்து; பெருவிறல்- மிக்க வலியை யுடையவன். 9 - 11. பிடி - பெண்யானை; அது வேந்தனூர்தி.அவ்விடத்துப் புல்லிய தலையையுடைய பிடி நாணக் களிறுகளெல்லாம்புறங்கொடுத்து ஓடின. மு. ஆரமரோட்டலென்னுந் துறைக்குமேற்கோள் காட்டி, ‘இது சீறூர் மன்னன் வேந்தனைப்புறங் கண்டது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 5,ந. (308)
|