386
நெடுநீர நிறைகயத்துப்
படுமாரித் துளிபோல
நெய்துள்ளிய வறைமுகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும்
5ஊன்கொண்ட வெண்மண்டை
ஆன்பயத்தான் முற்றழிப்பவும்
வெய்துண்ட வியர்ப்பல்லது
செய்தொழிலான் வியர்ப்பறியாமை
ஈத்தோ னெந்தை யிசைதன தாக
10வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன்மலர்ப் பூத்த தும்பின
புறவே, புல்லருந்து பல்லாயத்தான்
வில்லிருந்த வெங்குறும்பின்று
கடலே, காறந்த கலனெண்ணுவோர்
15கானற் புன்னைச் சினைநிலைக் குந்து
கழியே, சிறுவெள் ளுப்பின் கொள்ளை சாற்றிப்
பெருங்கனன்னாட் டுமணொலிக்குந்து
அன்னநன் னாட்டுப் பொருநம் யாமே
பொராஅப் பொருநரேம்
20குணதிசை நின்று குடமுதற் செலினும்
குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்றிசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க வெள்ளியாம்
25வேண்டிய துணர்ந்தோன் றாள்வா ழியவே.

(பி - ம்.) 1 ‘நிறையககயத்துப’ 10 ‘நெலலி வேயி னீடிய’ 11. ‘பூத்ததுமபினனுறவேபுலலருந்து’ 15 ‘நிலககுந்து 16 ‘கொளளைச் சாறறி’ 17 ‘பெருங்கனனாட்டு’ 20 - 21 ‘குடதிசை...செலினும் வடதிசை’ 24 ‘நிறகவெனறியாம்.

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர்கிழார்.


(கு - ரை.) 1. கயம் - பள்ளமான நீர்நிலை.

3 வறை - வறையல் ; ஒருவகை உணவு. முகக்க - முகந்துகொள்ள.

1 - 3. சுட்ட நெய்யில் வேகும் வறையின் முழக்கத்திற்குக் கயத்தில் வீழும் மாரித்துளியின் முழக்கம் உவமம் ; சீவக. 2971

4. சூடு - சுடப்பட்ட இறைச்சி.

5. புறநா. 384: 8 - 9. 6. ஆன்பயம் - பசுப்பால்.

7. உண்டமையாலுண்டான வேர்வையல்லாமல்.

8. அறியாதபடி.

10 - 11. கரும்பின்பாத்தி : “கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்” (ஐங்குறு. 65)

11. ததும்பின - நிறைந்தன.

12. புறவு - முல்லைநிலம். ஆயத்தான் - ஆயத்தோடு கூடி.

13. குறும்பு - சிற்றரண்கள்.

14. கால் தந்த - காற்றாற்கொண்டுவரப்பட்ட.

15. சினை - கிளை. நிலைக்குந்து - நிலைக்கும்.

17. உமண் - உப்புவிற்குஞ்சாதி.

16 - 7. “சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும்பாண். 64 - 5)

19. பொராப் பொருநர் - கூத்தர் ; வெளிப்படை ; பொராஅ - ஒப் பில்லாதவெனினுமாம். 20. செலினும் - சுக்கிரன் சென்றாலும்.

24. வெள்ளி - சுக்கிரன். 25 வேண்டியது - யாம்வேண்டியதை.

(386)