(கு - ரை.) 2. நெற்கவளம் : புறநா. 184 : 1, 337 : 14; “காய்நெற் கற்றையின், பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சரம்” (சீவக. 81). நெய்ம் மிதி : ‘நெய்ம்மிதி கவளம்’ (பெரும்பாண். 394); “நெய்ம்மலி கவளங் கொள்ளாது” (சீவக. 1076); “நெய்ம்மிதி கவளந் தெவிட்டிநின் றடர்க்கு நிழல்சுளி தறுகண்மால் யானை”, “கைம்முகந் தெடுத்த நெய்ம்மிதி கவளங் களித்தெறி மும்மதக் களிறு” (கூர்ம. சூரியன் மரபு. 8, 22) 4. பலவின்பாற் படர்க்கைவினைக்குறிப்புமுற்று வினையெச்சக் குறிப்பானதற்கு மேற்கோள்; நன். சூ. 350, மயிலை; நன். வி. சூ. 351; இ. வி. சூ. 250. 7. உண்ணுதற்குரிய நீரைப்புக விடாது தடுத்தல் பகைவர்க்குரிய தொழிலாதலின் நீரின்மை கூறப்பட்டது. 9.புறநா. 36 : 11. 10. வய என்னும் உரிச்சொல் ‘வலி’ என்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; இ. வி. சூ. 290, உரை. 11 - 2. புறநா. 390 : 1 - 2; “மறவையா யென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை” (சிலப். 7 : 42) 16. புறநா. 36 : 13. 11 - 6. “அறவை......காணுங்காலே” என இது செம்பொருட்செவியுறை; தொல். செய். சூ. 128, பேர். மு. அகத்தரசற்கு அழிந்து கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 10, இளம். ஆவூர் என்பது சோழ நாட்டின்கண் காவிரியின் தென்பாலுள்ளதான ஒரு பழையவூர் ; பாடல்பெற்ற சிவஸ்தலம். நினதெனத்திறத்தல் அல்லது போரொடு திறத்தல் அரசர்க்குரிய இயல்பென்று நினைந்து கூறினமையின், இச்செய்யுள் அரசவாகையாயிற்று. (44)
1. “அம்ம கேட்பிக்கும்” (தொல். இடை. சூ. 28)
|