(கு - ரை.) 1-2. உரித்த உடும்பு என்பிற்குஉவமம். கடும்பு - சுற்றம். இவ்வடிகள் வறுமையின்மிகுதியைப் புலப்படுத்துகின்றன. புல்லென் யாக்கைஎன்பர். 3. “சில்செவித் தாகியபுணர்ச்சி” (அகநா. 90 : 4) “புலவுவாய்ப் பாண” (பெரும்பாண்.22) என்பதற்கு, கற்ற கல்வியை வெறுத்துக் கூறுகின்றவாயினையுடைய பாணனே என்று பொருள்கூறி இவ்வடியையேமேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். 5. மார்பில் மூன்று வரிகள் கிடத்தல்ஆடவர்க்கு உத்தம இலக்கணம்; புறநா. 161 : 27; “மார்பிற்செம்பொறி வாங்கிய மொய்ம்பு” (முருகு. 104 -5) “பொறிகுலாய்க் கிடந்த மார்பிற் புண்ணியன்”(சீவக. 1706); “செவ்வரை யாகத்தான்” (சீகாளத்தி.நக்கீர. 31) 6-7. புறநா. 10 : 9 - 10, குறிப்புரை. 8. ‘புனிறு’ என்னும் உரிச்சொல்ஈன்றணிமையாகிய குறிப்புப் பொருளை உணர்த்தியதற்குமேற்கோள்; தொல். உரி. சூ. 77, ந. 8-9. கலித். 99 : 4-5, “மணற்கிளைக்கநீரூறு மைந்தர்கள் வாய்வைத், துணச்சுரக்குந் தாய்முலையொண்பால்” (திருவள். 31); “சரயு வென்பதுதாய்முலை யன்னதிவ், வுரவு நீர்நிலத் தோங்கு முயிர்க்கெலாம்”(கம்ப. ஆற்று. 12); “பிள்ளை தைவரப்பெருகுபால் சொரிமுலைத் தாய்போல், மள்ளர் வேனிலின்மணற்றிடர் பிசைந்துகை வருட, வெள்ள நீரிருமருங்குகால் வழிமிதந் தேறிப், பள்ள நீள்வயற்பருமடை யுடைப்பது பாலி” (பெரிய.திருக்குறிப்பு. 22) 11-2. புட்பகை - புள்ளின்தீயநிமித்தம்; அது மயில் வலமாதல், காகம் இடமாதல்முதலியன. “நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ, டெங்கோனேயின னாதலின்” (தொல். புறத்திணை சூ. 3, ந.மேற்.) 11-3. “ஏகும்மள வையின்வந்தனவலமும்மயி லிடமும், காகம் முத லியமுந்திய தடைசெய்வனகண்டா, னாகம்மன னிடையிங்குள திடையூறென நடவான்,மாகம்மணி யணிதேரொடு நின்றானெறி வந்தான்” (கம்ப.பரசுராம. 5); புள்ளின் தீய நிமித்தத்தையும் மதித்திலரெனமறவரின் வீரச்சிறப்புக்கூறினார்; “உறினுயி ரஞ்சாமறவ ரிறைவன், செறினுஞ்சீர் குன்ற லிலர்” (778)என்னும் குறளும், ‘போர் பெற்று அறியாமையின்,அதுபெற்றால் அரசன் தடுப்பினும் நில்லாரென்பதாம்;பிறரும்........புட்பகைக், கேவானாகவிற் சாவேம் யாமென,நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப’ என்றுங் கூறினார்’என்று வந்துள்ள பரிமேலழகர் வாக்கியங்களும்ஈண்டறியத்தக்கன. 16. “கீழு மேலுங் காப்போர் நீத்த,வறுந்தலைப் பெருங்களிறு” (நற். 182 : 8 - 9) 17. ஓர்க்கும் : “நென்னீ ரெறிந்துவிரிச்சி யோர்க்கும்” (புறநா. 280 : 6); கலித்.46 : 13; அகநா. 88 : 3. 16-7. “நாறுமயிர் மடப்பிடி தழீஇ வேறுநாட்டு,விழவுப்படர் மள்ளரின் முழவெடுத் துயரிக், களிறதர்ப்படுத்த”(அகநா. 189 : 4 - 6) 19. புறநா. 22 : 31-3, குறிப்புரை. 223-ம் திருக்குறளில், ‘இலனென்னும்எவ்வ முரையாமை யீதல்’ என்னும் பகுதிக்குரியவிசேடவுரைகளுள் ‘யான்இலனென்னும் இளிவரவைப்பின்னும், பிறனொருவன் பாற்சென்று அவன் உரையாவகையாற்கொடுத்தல்’ என்னும் பகுதி, இவ்வடியின் பொருளைப்பின்பற்றியது. பொறி, இரேகை, வரை, வரி என்பன ஒருபொருட்சொற்கள். “செருமான வேற்சென்னி தென்னுறந்தையார்தம், பெருமான் முகம் பார்த்த பின்னர்-ஒருநாளும்,பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம்,காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்” என்னும்பழைய பாடல் இவ்வடியின் பொருளை நன்குவிளக்குகின்றது. பாண, செலின், நல்குவனெனப் பாணனைஆற்றுப்படுத்தியதாகக் கூறினமையின், இச்செய்யுள்பாணாற்றுப் படையாயிற்று. (68)
1 புறநா. 7 : 5; “திருமறு மார்பநீ யருளல் வேண்டும்”,“பொன்னிற் றோன்றிய புனைமறு மார்ப” (பரி.1 : 36, 4 : 59); “இருநிலங் கடந்த திருமறு மார்பின்,முந்நீர் வண்ணன்” (பெரும்பாண். 29 - 30); “குருந்தமொசித்தஞான் றுண்டா லதனைக், கரந்த படியெமக்குக்காட்டாய்-மரம்பெறா, போரிற் குருகுறங்கும் பூம்புனனீர்நாட, மார்பிற் கிடந்த மறு” (தொல். புறத்திணை.சூ. 5, ந. மேற்.) 2. பு. வெ. 33.
|