362
ஞாயிற் றன்ன வாய்மணி மிடைந்த
மதியுற ழார மார்பிற் புரளப்
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெ...................
5.........................கும விசய வெண்கொடி
அணங்குருத் தன்ன கணங்கொ டானைக்
கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்
ஆக்குரற் காண்பி னந்த ணாளர்
நான்மறைக் குறி . . . . . . . . . யின்
10அறங்குறித் தன்று பொருளா குதலின்
மருடீர்ந்து மயக்கொரீஇக்
கைபெய்தநீர் கடற்பரப்ப
ஆமிருந்த வடைநல்கிச்
சோறுகொடுத்து மிகப்பெரிதும்
15வீறுசான.....................நன்றும்
சிறுவெள் ளென்பி னெடுவெண் களரின்
வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலுங் கூவு மகலு ளாங்கட்
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொ
20டில்லென் றில்வயிற் பெயர மெல்ல
இடஞ்சிறி தொதுங்க லஞ்சி
உடம்பொடுஞ் சென்மா ருயர்ந்தோர் நாட்டே.

(பி - ம்.) 2 ‘மணியுற ழாரம்’ 5 ‘வெனகொடி’ 8 ‘னந்தணாளிர்’ 14 ‘கொடுக்குமிகப்’

திணை - பொதுவியல்; துறை - பெருங்காஞ்சி.

அவனைச் சிறுவெண்டேரையார்.


(கு - ரை.) 1. ஆய்மணி - ஆராய்ந்தெடுத்த மாணிக்கம்; அழகிய மணியுமாம்.

2. வட்டப்பூண் புரள; மதியுறழ் ஆரம் - பிறைவடமுமாம்.

3. முரசு பலிபெறுதல் இந்நூல் 50-ஆம் பாட்டாலும் அதன் குறிப்பாலும், "கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை, ஆடுநர் பெயர்ந்து வந் தரும்பலி தூஉய்" (பதிற்.17 : 5 - 6); "கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம், பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலி யோச்சி" (பெருங்.2. 2 : 29 - 30) என்பவற்றாலும் அறியலாகும்.

5. வெற்றியைப் புலப்படுத்தும் வெள்ளிய கொடி: "விசயம் வெல்கொடி யுயரி’ (முல்லை.91); "புலவுப்படக் கொன்று மிகைதோ லோட்டிப், புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி" (மதுரைக். 370-71); "மலைநீர், வென்றெழு கொடியிற் றோன்றும்" (மலைபடு.581 - 2); "வான்றோய் வெல்கொடி" (பதிற். 69 : 1)

6. அணங்கு உருத்தன்ன தானை - தெய்வங்கள் உருக்கொண்டு வந்தாற்போன்ற சேனை; உருத்தன்ன - கோபித்தாற்போன்ற வென்றுமாம்.

7. புறநா.56 : 11; "கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின்" (முருகு.81) 12. தானநீர் கடலிற் சென்று பரவ.

13. ஆம் - நீர். அடை - தண்ணடை; மருதநிலத்து ஊர்.

17. வாய்வன் காக்கை - வலிய வாயையுடைய காகம்; கூகை - கோட்டான். மு. புறநா. 238 : 3.

17 - 8, புறநா. 356 : 2; "பேணா ரகநாட்டு, நன்பகலுங் கூகை நகும்" (பு. வெ.39) 19. சுற்றத்தின் மிகுதி கூறியபடி.

20. இல்லென்று - இல்லையென்று.

(362)