(பி - ம்.) 3 ‘யுடையதம்’, 8 - 9‘வேட்டெழுந்தாங், கிருங்களிற் றொருத்தல்’ திணையும் துறையும் அவை.
சோழன் நல்லுருத்திரன்(பி - ம். சோழனல்லுத்திரன்)பாட்டு. (இ - ள்.) விளைந்த செவ்வியையுடையசிறிய இடத்தைப்பார்தது வளைந்த கதிராகிய உணவைக்கொண்டுமுழையின்கண்ணே நிறைய வைக்கும் எலிமுயன்றாற்போலும்சிறிய முயற்சியராகி உள்ள தம்முடைய செல்வத்தைநுகராது இறுகப் பிடிக்கும் உள்ளமிகுதியில்லாருடன்பொருந்திய நட்பு இல்லையாக; தறுகண்மையையுடைய கேழலாகியபன்றி தனது இடப்பக்கத்தேபட வீழ்ந்ததாக, அன்றுஅவ்விடத்து உண்ணாதாகிப் பிற்றைநாட் பெரியமலையின்கண் தனது முழையிடம் தனிமைப்பட உணவைவிரும்பியெழுந்து பெரிய களிறாகிய ஒருத்தலை நல்லவலப்பக்கத்தே படப் படுக்கும் புலிபசித்தாற்போலும்குறையில்லாத மேற்கோளையுடைய வலியையுடையோர் நட்போடுபொருந்திய நாட்கள் உளவாக-எ - று. சீறிடமென்றது, விளைந்து முற்றியபின்அறுப்பதற்கு முன்னாகிய இடத்தை. இல்லாகியர், உளவாகியரென்பன ஈண்டுவியங்கோட்பொருளவாய் நின்றன. |
(கு - ரை.) 4 - 5. இயைபென்னுமுரிச்சொல்கூட்டமென்னும் குறிப்புணர்த்துவதற்கு மேற்கோள்; (தொல்.உரி. சூ. 11, ந.; இ. வி. சூ. 290, உரை) 10. புலிபசித்தாற் புல்லைத்தின்னாதென்பது ஒரு பழமொழி. 9 - 10. புறநா. 237 : 16 - 7; “நல்லாறொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும், அல்லனசெய்தற் கொருப்படார் - பல்பொறிய, செங்கட்புலியே றறப்பசித்துந் தின்னாவாம், பைங்கட்புனத்தபைங் கூழ்” (நீதிநெறி. 61) 6 - 11. “தொடங்குவினை தவிராவசைவி னோன்றாட், கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின்,வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த, தாழ்விலுள்ளம்” (அகநா. 29); “கடமா தொலைச்சியகானுறை வேங்கை, யிடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்”(நாலடி. 300); “வாய்வதாகிய பொருளினை வல்விரைந்தன்னோ? ஆய்வ தாய்கில ராக்குவான் புகுந்தழிப்பார்போற், காய்வ தாகிய திறத்தினாற் கதழ்ந்துதாயிடத்து, வீழ்வ தாக்கியுண் ணாதுபோ துவவிள வேங்கை”(தணிகைப்புராணம், நாடு. 43) (190)
|