(கு - ரை.) 1. புறநா.397 : 1. 2. வகைமாணல்லில்-கட்டுக்களால் மாட்சிமைப்பட்ட நல்ல வீடு. 3. வாரணம் - கோழி ; "பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப" (மணி.7 : 116) 4. பூமுகை - மலரும் பருவமுள்ள அரும்பு. 6. புறநா.397 : 6, குறிப்புரை. 8. வரிசை - முறை. வஞ்சன் : இப்பாட்டுடைத்தலைவன் பெயர். 9. நகைவர்-நண்பர் ; புறநா. 373 : 35, குறிப்புரை. 11. துன்னல்போகிய - அணுகுதற்கரிய. 10 - 11. புறநா.54, மு. 9 - 11. புறநா.170 : 14 - 7. 13. புறநா.399 : 25. 15. ஆகியர் - ஆகுக. என - என்று யான் கூற. 16. அறீஇ - அறிந்து. 20. "புகைமுகந் தன்ன மாசி றூவுடை" (முருகு. 138). உடீஇ - உடுத்தி. 25. புறநா. 395 : 36, குறிப்புரை. 27. "அரவுற ழார முகக்குவ மெனவே" (புறநா. 368 : 18) (398)
|