(கு - ரை.) 1. “மேதி யன்ன கல்”(மலைபடு. 111) 2. ஆபரந் தன்ன செலவிற்பல், யானை”,“ஆபரந்தன்ன யானையோன் குன்றே” (பதிற்.77 : 11 - 2, 78 : 14) 3. “வான வரம்பனை நீயோ பெரும”(புறநா. 2 : 12); தொல். இடை. சூ. 8. தெய்வச்.மேற். 1 - 3. “எருமை........பெருமவென்பது,நரிவெரூஉத்தலையார் தம் உடம்பு பெற்று வியந்து கூறியபாட்டாகலின், இது தன்கட்டோன்றிய ஆக்கம் பற்றிவியப்புப் பிறந்ததாயிற்று” (தொல். மெய்.சூ. 7, பேர்.; இ. வி. சூ. 578) 6 - 7. புறநா. 4 : 18-9-ஆம்குறிப்புரையைப் பார்க்க. மக்கட் கணின்ற இளமைப்பெயர்க்குஇது மேற்கோள்; தொல். மரபு. சூ. 23, பேர். 8. “அளிதோ.....குரைத்தே : இஃதுஇசைநிறை” (தொல். இடை. சூ. 24. சே.; தெய்வச்.;ந.; இ. வி. சூ. 278); “என்றிசினோர், பெறலருங்குரைத்துஎன்பன போலச் செய்யுண் முடிபு பெற்று நின்றதென்றலேபொருத்த முடைத்து” (தொல். எச்ச. சூ. 1, சே.);குரையென்னும் அசைநிலையிடைச்சொல் வந்துள்ளதொடர்மொழிக்குஇது மேற்கோள் (நன். மயிலை. சூ. 440; நன்.வி. சூ. 441). “கண்ணிற் சொலிச் செவியினோக்கு மிறைமாட்சி, புண்ணியத்தின் பாலதே” (நீதிநெறி.28) என்பது இங்கே அறியற்பாலது. மு : “எருமை......குரைத்தே :இதனுள் நிரயங்கொள்பவரொடொன்றாது காவலையோம்பெனவேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி அவற்கு உறுதிபயத்தலின், வாயுறைவாழ்த்தாயிற்று” (தொல்.புறத்திணை. சூ. 35, ந.) (5)
|