(கு - ரை.) 1. சிறிதும்தீங்குசெய்யத்தகாத சாதியாகலின், பசுமுற்கூறப்பட்டது; “ஆவு மாவுங் கொண்டுகழி கென்றே”(மணி. 9 : 25) 1 - 2. தொல். விளி. சூ. 8,தெய்வச். மேற்.; “ஆவு மானியற்........பிணியுடையீரும்’ என்றாற் போலும் அண்மைவிளியும் இதனாற் கொள்க”(தொல். விளி. சூ. 12, ந.) 4. “பொன்போற் புதல்வனோடென்னீத் தோனே” (ஐங்குறு. 265 : 4.) புதல்வன்செல்வமென்பது; கலித். 85 : 34 - 6, ந. 5. “எம்மம்பு....சேர்மி னென்பதுவிரைவு” (நன். மயிலை. சூ. 456; நன். வி. சூ.457) 1 - 5. “மண்டமர் மேல்கொடுவந்தன மின்னே, தண்டக நாட்டுறை தாபதர்நோயோர், பெண்டிரு நும்மர ணேகுதிர் பெட்டென்,றெண்டிசை யார்ப்ப விசைப்பறை சாற்றி”(காஞ்சிப். நாடு. 21). “ஆவும்.....சேர்மினெனத் திணைவிராய்வந்து முன்னிலைவினைகோடல் எற்றாற் பெறுதுமெனின், - அந் நிகரனசெய்யுண்முடிபெனப்படும்; அவற்றைஅதிகாரப்புறனடையாற் கொள்க” (தொல்.கிளவி. சூ. 45, சே.); “ஆவு மானியற் பார்ப்பனமாக்களுமென எண்ணி ‘நும்மரண் சேர்மின்’ எனமுன்னிலைவினைகோடல் செய்யுண்முடிபென்பதுஅதிகாரப் புறனடையாற்கொள்க” (தொல்.கிளவி. சூ. 45, ந.); “ஆவுமானியற் பார்ப்பனமாக்களும்.......சேர்மின் என ளகரவீற்றுஉயர்திணைப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின”(இ. வி. சூ. 207, உரை) 6. “அறத்தின் மண்டியமறப்போர் வேந்தர்” (புறநா. 62 : 7) “சொல்லுதல்யார்க்கு மெளிய வரியவாம், சொல்லிய வண்ணஞ்செயல்” (குறள், 664) என்பதும், “சிறப்புடைஅரசியலாவன : மடிந்த உள்ளத் தோனையும்மகப்பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடிபிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும்படையிழந்தோனையும் ஒத்தபடை யெடாதோனையும்பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாதுவிடுதலும் கூறிப்பொருதலும் முதலியனவாம்” (தொல்.புறத்திணை. சூ. 10, ந.) என்பதும் இங்கே அறியற்பாலன. 1 - 6. “இருபெருவேந்தர் பொருவதுகருதியக்கால் ஒருவர், ஒருவர் நாட்டுவாழும்அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத்தகாதசாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப்போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்குஅறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாதுஅறமேயாமென்றற்கு ‘ஆதந் தோம்பல்’ என்றான்;அஃது ‘ஆவும்....மறத்தின்’ எனச் சான்றோர்கூறியவாற்றா னுணர்க; மன்னுயிர்காக்கும் அன்புடைவேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழுமென்றற்கு, ‘மேவற்றாகும்’என்றான்” (தொல். புறத்திணை. சூ. 2, ந.; இ.வி. 602, உரை) என்பனவும், “நான்பால் பசுவேதுறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார், என்பாரையோம்பே னெனின்யானவ னாக வென்றான்” (சீவக.443) என்பதும் இங்கே அறியத்தக்கவை. 7. மீமிசை : “ஓங்குயர் சமந்தத்துச்சி மீமிசை” (மணி. 19 : 22). யானைமேற்கொடி : பதிற். 52 : 1, 69 : 1 - 2, 88 : 17; நெடுநல்.87; கம்ப. சம்புமாலி. 26. 9. செந்நீர்ப் பசும்பொன் -நால்வகைப் பொன்னுட் கிளிச்சிறை யென்பது; “செந்நீர்ப்பசும்பொன் புனைந்த பாவை” (மதுரைக். 410.) 10. முன்னொரு காலத்தில் மதுரையை அழித்தற்கு வந்த கடலை உக்கிர குமார பாண்டியனென்பவன், ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் அருளிய வேலையெறிந்து வற்றச்செய்து, அக்கடல் தன்னுடைய காலின் வடிம்பை யலம்பும்படி உயர்ந்துநின்றமையால், அவனுக்குக் கடல்வடிம்பலம்ப நின்ற பாண்டியனென்பது பெயராயிற்று; இதனைத் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தில் 21 - ஆவதிலுள்ள 6 - ஆம் விருத்தம் முதலியவற்றாலுணர்க : “அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத் துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” (சிலப். 11 : 17 - 20), “ஆழி வடிம்பலம்ப நின்றானும்” (நள. சுயம். 137), “கடல்வடிம்பலம்ப நின்ற கைதவன்” (வி. பா. 15 - ஆம் போர். 18) எனவும் வருபவை இதனை வலியுறுத்தும். நெடியோன் : “பொலந்தார் மார்பினெடியோ னும்பல்” (மதுரைக். 61); “உரைசால் சிறப்பி னெடியோனன்ன, அரைச பூதம்” (சிலப். 22 : 60 - 61) 11. பஃறுளியாறு : சிலப். 11 : 19. 8 - 11. ஓர் அரசரை வாழ்த்துகையில் அவரை அவர்க்குரிய ஆற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலின் இங்ஙனம் கூறினார்; புறநா. 43 : 21 - 3: “மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள், தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28 : 125 - 6) மு. இச்செய்யுள், பொருளின்றுய்த்த பேராண்பக்கத்திற்கும், இயன்மொழிவாழ்த்திற்கும் (தொல். புறத். சூ. 7, 29,இளம்.) உதாரணமாக முறையே காட்டப்பட்டுள்ளது. (9)
1 “கடற்றெய்வங்காட்டிக் காட்டி” (சிலப். கானல்வரி,சார்த்துவரி) 2. “முந்நீர் - கடல்;ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரெனஇவையென்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர்மேனீராதலானும் இவ்விரண்டு மில்வழி ஊற்றுநீரும்இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல்பொருந்தியதன்று; முதிய நீரெனின், “நெடுங்கடலுந்தன்னீர்மை குன்றும்” (குறள். 17) என்பதனால்அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின்முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச்செய்கை யாவன மண்ணைப் படைத்தலும் மண்ணையழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்” என்பர்அடியார்க்குநல்லார் (சிலப். 17 : முந்நீரின்); பெரும்பாண்.441; சீவக. 5, ந. பார்க்க. 3. இங்ஙனம் கூறியதுபூதங்களின் தோற்ற முறைபற்றி. 4 தொல். எச்ச. 67.
|