293
நிறப்புடைக் கொல்கா யானை மேலோன்
குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை
நாணுடை மாக்கட் கிரங்கு மாயின்
எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ
அளிய டானே பூவிலைப் பெண்டே.

(பி - ம்.) 1. ‘நிறப்புட்’ ‘நிறப்புடைகலனைமேலானதுவமபற கெறியும்’, 2 ‘குறும்பறகெறியுமோவற்’,‘குறும்பறவெறியும்’ 4 ‘எம்மிநும்’, ‘லிழந்த’,விலையெனப்’ 5 ‘புகுவர்’ 6 ‘ஒளியடானே’

திணை - காஞ்சி; துறை - பூக்கோட்காஞ்சி.

நொச்சி நியமங்கிழார். (பி - ம். நொசசிநீயககிழார்)


(கு - ரை.) 1. குத்துக்கோலைக்காய்தலையுடைய யானையின் மேலுள்ளான்; வள்ளுவன்.

2. குறும்பர்க்கு - புறமதிலைச் சூழ்ந்தசிற்றரசரோடு போர்செய்தற் பொருட்டு. ஏவற்றண்ணுமை- காஞ்சிப்பூக்கொள்ளுகைக்கு வீரரை ஏவுதலைச் செய்யுந்தண்ணுமைப்பறை; புறநா. 289 : 9 - 10.

3. போர்ப்பறை கேட்டவுடன் புறப்படாமற்பூக்கோட்பறை அறையப்படுங்காறும் தாமதித்து நிற்பவர்கள்,‘நாணுடைந்தமாக்கள்’ என்றிகழ்ந்து கூறப்பட்டனர்;“நாணுத்தக வுடைத்து”, “நாண்முறை தபுத்தீர்” (புறநா.36, 294) என்பர்; “பல்லாக் கொண்டா ரொல்லாரென்னும்,பூசல் கேட்டுக் கையது மாற்றி” (பன்னிருபடலம்),“நிரை கோள் கேட்டுச் செய்தொழி லொழிய” (பு.வெ. 23), “முரசெருக்கலு முண்டியையிடை நீத்துமொய்குழன்மாதரின், விரசியாட லிடைக் கணீத்தும் விநோதநீத்துநடத்தொடு, பரசுபாடல்கணீத்தும் வெய்து பல்வீரரும் படை நான்கொடும், அரசவீதியில் வந்துதொக்கனராழிபோ லொலிமிக்கதே” (விநாயக. பிந்தியமயூரேசர்.405) என்பவற்றாற் போர்ப்பறை முதலியவற்றைக் கேட்டவுடன்வீரர் போருக்குப் புறப்பட்டமை அறியலாகும்.

6. அளியள் - இரங்கத்தக்காள். பூவிலைப்பெண்டு: “பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே” (பழம்பாடல்)

(293)