(பி - ம்.) 2 ‘உறுநிலத்துதவா’ திணை - அது; துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ - ள்.) வற்றிய குளத்தின்கண்ணே பெய்தும் அகன்ற விளை நிலத்தின்கண்ணே சொரிந்தும் இவ்வாறு குளத்தும் விளைநிலத்தும் பெய்யாது களர்நிலத்தை நிறைத்தும் எவ்விடத்தும் வரையாத மரபினையுடைய மழைபோல மதமிக்க யானையினையுடைய கழல்புனைந்த காலையுடைய பேகன் கொடையிடத்துத் தான் அறியாமைப்படுதலல்லது பிறர் படை வந்து கலந்துபொரின் அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்-எ - று. 1 படைமடமென்றது, வீரரல்லாதார்மேலும், முதுகிட்டார்மேலும் புண்பட்டார்மேலும் மூத்தார் இளையார்மேலும் செல்லுதல். |
(கு - ரை.) 1. அறுகுளம் - நீரற்ற குளம்; "அற்றகுளத்தில்" என்பது மூதுரை. 3. வரையாமரபு - எல்லையிடாத முறைமை. "மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ" (கபிலரகவல்) 1-3. "மழைவள்ளல்" (சீவக. 899) 4. புறநா. 141 : 12, 145 : 3. 5. புறநா. 141 : 10 - 12; 'கொடைமடம்படுதல் - அகாரணத்தாற் கொடைகொடுத்தல்' (ஞானாமிர்தம், 17, உரை); "கொடைமடம் வரையாது கொடுத்த லாகும்" (திவாகரம்); கொடைமட மென்று சொல்ப வரையாது கொடுத்த லாமே" (சூடாமணி. 9 : 10); "வல்லார் வல்ல கலைஞருக்கு மறைநூ லவர்க்குங் கடவுளர்க்கும், இல்லா தவர்க்கு முள்ளவர்க்கு மிரந்தோர் தமக்குந் துறந்தவர்க்கும், சொல்லாதவர்க்குஞ் சொல்பவர்க்குஞ் சூழுஞ் சமயா திபர்களுக்கும், அல்லா தவர்க்கு மிரவி மகனரிய தான மளிக்கின்றான்" (வி. பா. கிருட்டினன்றூது, 235) என்னுஞ் செய்யுளிற் கொடைமடம் விளங்கக் கூறப்பட்டிருத்தல் காண்க. ‘கொடைமடம் படுதலல்லதென்பது வசைபோன்று புகழ்; இது செம்பொருளின்பாற்படும்' (தொல். செய். சூ. 124, பேர்.) 3-5. புறநா. 55 : 15, குறிப்புரை; 133 : 6 - 7, குறிப்புரை. (142)
1."உடையிட்டார் புன்மேய்வா ரோடுநீர் புக்கார், படையிட்டார் பற்றேது மின்றி - நடையிட்டார், இவ்வகை யைவரையு மென்று மணுகாரே, செவ்வகைச் சேவகர் சென்று" (சிறுபஞ்ச. 41); "சடையின ருடையினர் சாம்பற் பூச்சினர், பிடிகைப் பீலிப் பெருநோன் பாளர், பாடுபாணியர் பல்லியத் தோளினர், ஆடு கூத்த ராகி யெங்கணும், ஏந்துவாளொழிய............வேண்டுவயிற் படர்தரக், கச்சை யானைக் காவலர் நடுங்க,............அதரிதிரித்த வாளே ருழவன்" (சிலப். 26 : 225 - 34) என்பனவும், 'ஏந்தறன்', 'கைப்படை', 'வீறின்மையின்' (சீவக. 2258,
|