(கு - ரை.) 1. தேம் - கள். 3. அவல் - பள்ளம். குடை - பனமட்டையாற் செய்யப்பட்ட ஒரு கருவி; பனம்பட்டையெனத்தென்னாட்டில் வழங்கும்; "மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை, இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து" (குறுந். 168 : 1 - 2); கலித். 23 : 9. 4. புதற்றளவின் பூ : புறநா. 395 : 6. 5. மு. புறநா. 63 : 12. வள்ளி - வளை. 6. குன்று - மணற்குன்று; எக்கர். 8, நொடை - விலை. 10, கலம் - ஆபரணம். 9 - 10. தித்தன் : ஒரு சோழன். உறந்தை - உறையூர்; புறநா. 395 : 18 - 9; "நொச்சி வேலித் தித்த னுறந்தை" (அகநா. 122 : 21) 12 - 3. சுணங்கிற்கு வேங்கைப்பூ உவமை : "நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக், களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற்" (சிறுபாண். 23 - 4); "வேங்கை வென்ற சுணங்கின்" (ஐங்குறு. 324); "வேங்கை, ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள, ஆகத் தரும்பிய மாசறு சுணங்கின்", "பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய, நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலை" (அகநா. 174 : 10 - 12, 319 : 8 - 9); "வேங்கைவீ, முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம்" (கலித். 64 : 26 - 7) 14. மா - கருமை. தன்னை - தமையன். (352)
|