4
வாள், வலந்தர மறுப்பட்டன
செவ்வானத்து வனப்புப்போன்றன
தாள், களங்கொளக் கழல்பறைந்தன
கொல்ல் லேற்றின் மருப்புப்போன்றன
5தோல், துவைத்தம்பிற் துளைதோன்றுவ
நிலைக்கொராஅ விலக்கம் போன்றன
மாவே, எறிபதத்தா னிடங்காட்டக்
கறுழ்பொருத செவ்வாயான்
எருத்துவவ்விய புலிபோன்றன
10களிறு, கதவெறியாச் சிவந்துராஅய்
நுதிமழுங்கிய வெண்கோட்டான்
உயிருண்ணுங் கூற்றுப்போன்றன
நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
15மாக்கட னிவந்தெழுதரும்
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ
அனையை யாகன் மாறே
தாயி றூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே.

(பி - ம்.) 10 ‘களிறே’ 14 ‘பொலிவொடு’

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை.

சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னியைப் பரணர்பாடியது.

(இ - ள்.) வாள் வெற்றியைத்தருதலாற் குருதிக்கறைபட்டன, செக்கர் வானத்தினதுஅழகையொத்தன; கால்புடை பெயர்ந்துபோர் செய்துகளத்தைத் தமதாக்கிக்கொள்ளுதலால் வீரக்கழல் 1அருப்புத்தொழில் பறைந்தவை, கொல்லும் ஆனேற்றினதுகோட்டையொத்தன;பரிசைகள் ஒலித்துத் தைத்த அம்புகளால் துளைதோன்றுவன,நிலையிற் றப்பாத இலக்கத்தையொத்தன; குதிரைகள்எதிரியை எறியும் காலமுடையான் 2 இடவாய்வலவாயாகிய இடத்தைக் காட்ட முகக்கருவி பொரப்பட்டசெவ்வாயை உடைமையான் மான்முதலாயினவற்றின் கழுத்தைக்கவ்வி உதிரம் 3 உவற்றியுண்ட புலியை யொத்தன;களிறுகள், கதவை முறித்து வெகுண்டு உலாவி நுனைதேய்ந்தவெளியகோட்டையுடைமையான் உயிரையுண்ணும் கூற்றையொத்தன;நீதான், அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற்பூட்டப்பட்ட பொற்றேரின்மேலே பொலிவொடு தோன்றுதலாற்கரிய கடலின்கண்ணே ஓங்கியெழுகின்ற செய்யஞாயிற்றினது ஒளியையுடையை; அத்தன்மையையாதலால்,தாயில்லாத உண்ணாக் குழவிபோல ஒழியாது கூப்பிடும்நின்னைச் சினப்பித்தவருடைய நாடு - எ - று.

நாடென்றது (19) நாட்டுள்வாழ்வாரை. மாறென்பது (17) ஏதுப் பொருள்படுவதோர்இடைச்சொல்.
கழல்பரிந்தன (3) வென்றோதி, வீரக்கழல் நீங்கியவையென்றுஉரைப்பாருமளர்.

வாளாகிய மறுப்பட்டவை (1) யெனவும்,கழலாகிய பறைந்தவையெனவும் (3) தோலாகிய துளைதோன்றுவ(5) வெனவும் கொள்க.

துவைத்துத் தோன்றுவவென இயையும்.

எறிபதத்தா (7) னென்பதற்கு 4 ஒத்தும்காலையுடையானென்று உரைப்பாருமுளர்.

செஞ்ஞாயிற்றுக் கவினை (16) யென்றதுணையும்மன்னவன் புகழும், ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடென(19) ஒன்னார் நாடழிபிரங்கலு மோதலான், இது கொற்றவள்ளை(பு. வெ. 43) ஞாயிற்று.


(கு - ரை.) 1 - 2 நேரசை கூனாய்நின்றதற்குஇவ்வடிகள் மேற்கோள்; தொல். செய். சூ. 48; பேர்.;49, ந.

3. களத்தைத் தமதாக்கிக் கொள்ளுதல்: புறநா. 53 : 5. கு - ரை. “வென்று களங்கொண்ட வேல்வேந்தே”(பு - வெ. 225) என்பதனாலும், “தேன்மிடைந்த தாரினான்செங்களஞ் சிறந்ததே” (சீவக. 279) என்பதற்குஎழுதப்பட்ட ‘இத்துணையும் இவன் வெற்றியாதலின்இவன் களமென்றார்’ என்னும் குறிப்புரையாலும்விளங்கும். “பறைதாள் விளவு” (பெரும்பாண்.95). இவ்வடி பதினோரெழுத் திருசீரடி வஞ்சிப்பாவிற்குமேற்கோள்; யா - வி. ஒழிபியல், சூ. 95.

5. துவையென்னும் உரிச்சொல் ஓசைப்பொருளில்வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ.458; நன். வி. சூ. 459.

5 - 6. குறளடியும் சிந்தடியும் வந்தமையான்மயக்கடி வஞ்சிப் பாட்டானதற்கு மேற்கோள்; தொல்.செய். சூ. 47. ந.

6. “கம்பமொடு துளங்கிய விலக்கம்”(புறநா. 260 : 23)

9. ‘எருத்துவ்விய’ எனப்பாடங்கொண்டுஎரு, இறைச்சியெனப் பொருள்கூறுவர் தக்க. உரையாசிரியர்(386)

10 - 11. கடிமதிற் கதவம் பாய்தலிற்றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண்கோட்டுச்,சிறுகண்யானை” (அகநா. 24 : 11 - 3)

10 - 12. களிறு....போன்றன; நிரைபசைவஞ்சியடியிற் கூனாய் வந்ததற்கு மேற்கோள்; தொல்.செய். சூ. 48, பேர்.; ந.

13. புறநா. 2 - 13.

15 - 6. “பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங், கோவறவிமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”(முருகு. 2 - 3) ; தொல். கிளவி. சூ. 18 : தெய்வச்.;கல். மேற்.; புறநா. 228 : 8 - 9; பு - வெ. 201) ; சீவக.2371.

13 - 6. வாழ்த்து வகையில் தேரடுத்துவந்ததற்கு இதுமேற்கோள்; தொல். புறத்திணை. சூ.31. ந.

17. மு. புறநா. 20 : 20; பதிற்.80 : 12. மாறு, மூன்றாம்வேற்றுமைப்பொருட்கண் வருமென்பதற்கும்(தொல். இடை. சூ. 2, சே.; இ - வி. சூ. 251, உரை), காரணப்பொருளுணர்த்திநிற்குமென்பதற்கும் (தொல். இடை. சூ. 2, ந.),ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்து நின்றசொற்பொருளையே உணர்த்தி நிற்குமென்பதற்கும்முச்சீரடி இடை வந்ததற்கும் (தொல். இடை. சூ. 32,ந.; தொல். செய். சூ. 71, பேர்.) இது மேற்கோள்.

18 - 9. “ஈன்றோ ணீத்த குழவிபோல”, தாயி, றூவாக் குழவி போல” (புறநா.230 : 7, 379 : 14 - 5); “குழவிகொள் வாரிற் குடிபுறந்தந்து”(பதிற். 6 - ஆம்பத்துப் பதிகம்); “தாயிலாக்குழவி போலச் சாதுய ரெய்துகின்றேன்; (சீவக.1581) ; ‘தாயி றூவாக் குழவித்துயர்” “தாயொழிகுழவி போலக் கூஉம்” (மணி. 13 : 11, 25 : 111);

“ஓங்குகுடை நீழ லுலகுதுயின் மடியக்,குழவிகொள் பவரி னிகழா தோம்பி” (பெருங்.4. 10 : 133 - 4)

15 - 9. வஞ்சிப்பா மண்டில ஆசிரியத்தான்இற்றதற்கு மேற்கோள்; தொல். செய். சூ., 71, பேர்.

இதன் 14 - ஆம் அடியாற் பாட்டுடைத்தலைவனதுபெயர்க்காரணம் புலப்படுகின்றது. (4)


1. அருப்புத்தொழில் : கலித்.104 : 23, ந.

2. ‘இடவாய்வலவாயாகிய இடம்’(கலித். 140 : 14, ந.)

3. உவற்றி - ஊற்றி; “ஒண்செங்குருதியுவற்றியுண்டருந்துபு,புலவுப்பலி துறந்த கலவுக்கழி கடுமுடை” (அகநா.3)

4. ஒத்துதல் - அழுத்தல்; “ஒத்துந்தாளத் தொக்கத் தத்தித், தத்தும் பரிதன்றான் வைத்ததுவே”(திருவால. 28 : 53)