(கு - ரை.) 1. எஃகு - வேல். 2. பெருஞ்செயாளனை - பெரிய செய்கையை ஆளும் வீரனை;“பெருஞ்செ யாடவர்” (புறநா. 199 : 5) 3. புறநா. 86 : 2. 5. இறுமார் - முடித்தற்கு. 4 - 5. அகலம் - மார்பு. அகலத்தை எறிய. 6. படைக்கலங்களுக்குட் கிடக்கின்றமையின், உடம்புதோன்றாதாயிற்று. கெட்டன்று - கெட்டது; நீங்கிற்று. 7. மடங்கி - மீண்டு. 9. பலகை - கேடகம். 10. சேண் - நெடுந்தூரம்; “சேண்விளங்கும் புகழ்” (புறநா.10 : 11); “சேண்விளங்கு நல்லிசை” (அகநா. 205 : 8) 11. நவிலுதல் - கூறிப்பழகுதல்; “மறை நவி லந்தணர்”(புறநா. 1 : 6) : “நவிறொறு நூனயம் போலும்” (குறள்,783) 10 - 11. துறக்கத்தில் விளங்குதற்குக் காரணமாகிய நல்லபுகழென்றுமாம்; புறநா. 27 : 7 - 9, குறிப்புரை. (282)
|