திணையும் துறையும் அவை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச்சென்றபிசிராந்தையாரை, ‘கேட்குங்காலம் பலவாலோ?நரைநுமக்கில்லையாலோ?’ என்ற சான்றோர்க்குஅவர் சொற்றது. (இ - ள்.) நுமக்குச் சென்றயாண்டுகள் பலவாயிருக்க நரையில்லை யாகுதல் எப்படியாயினீரெனக்கேட்பீராயின், என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடையமனைவியுடனே புதல்வரும் அறிவுநிரம்பினார்; யான்கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல்செய்வாரும்;1 அரசனும் முறையல்லாதன செய்யானாய்க்காக்கும்; அதற்குமேலே யான் இருக்கின்ற ஊரின்கண்நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டும் உயர்ந்தோரிடத்துப்பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினையுடையசான்றோர் பலராதலான்-எ - று. ‘ஆன்றவிந்தடங்கிய’ என்பதற்குக்கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவைமுதலியவற்றிற்செல்லும்அறிவவிந்து மனமொழிமெய்களான் அடங்கிய வெனினும்அமையும். ‘யாங்காகியர்’ என்பதற்கு எவ்வாறாயிற்றென்றும்,எப்படியாலாயிற் றென்றும் பொருள் கூறுவாரும் உளர். |
(கு - ரை.) 1 - 2. ‘உலகின்புறுதலாவது,இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதனவெல்லாம்அறியப்பெற்றேமென்றும், யாண்டு பலவாக நரையிலமாயினேமென்றும் உவத்தல்‘ (குறள், 399, பரிமேல்.) 3. மாண்டமனைவி : “மனைத்தக்கமாண்புடைய ளாகி”, “மனைமாட்சி யில்லாள்கணில்லாயின்”, “இல்லவண் மாண்பானால்” (குறள்,51 - 3.) 4. “மேகமே சேர்கொடை வேந்தமிர்துசேவகனும், ஆகவே செய்யினமிர்து” (சிறுபஞ்ச.4); “வெங்குருதி மல்க விழுப்புண் ணுகுதொறூஉ,மிங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும் - பைங்க, ணினம்போக்கி நின்றா ரிகல்வாட்டி வேந்தன், மனம்போலவந்த மகன்” (பு. வெ. 26) 5. “அல்லவை செய்தார்க் கறங்கூற்றமாமென்னும், பல்லவையோர் சொல்லும் பழுதன்றே”(சிலப். 20 : இறுதிவெண்பா, 1) 7. “நற்றவ முனிவருங் கற்றடங்கினரும், நன்னெறி காணிய தொன்னூற் புலவரு, மெங்கணும்விளங்கிய வெயிற்புற விருக்கை யின்,.....வஞ்சி”(மணி. 26 : 74 - 8) (191)
1 “முறைசெய்து காப்பாற்று மன்னவன்மக்கட், கிறையென்று வைக்கப் படும்” (குறள்,388)
|