(கு - ரை.) 1. குன்று-சிறுமலை. பிணித்து யாத்த - மிக உறுதியாக யாக்கப் பெற்ற. 2. சுட்டிய - நன்கு மதிக்கப்பெற்ற. மூவருலகம் - சேரசோழ பாண்டியருடைய நாடுகள் ; ‘உலகம்’ என்பது பூமியின் ஏகதேசத்திற்கும் வழங்கும்; "மாயோன் மேய காடுறை யுலகமும்" (தொல்.அகத்திணை. சூ. 5) 3. பொதுமையின்றி - சிறப்பாக. ஆண்டிசினோர்க்கும் - ஆண்டோர்க்கும். 4 - 5. ஆண்டுகள் - வாழ்நாட்கள். வெறுக்கை துணை வைத்த தன்றே - பொற்குவியல் துணையாக வைக்கப் பெற்றதன்று; அழியுந் தன்மைய தென்றபடி. 7. புணை - தெப்பம். துணை - மனைவி. 8. கூற்றுவன்தமர் வந்து கூடி உயிரை வௌவுங்காலத்தில். 9. உக்கரை - அக்கரை; வீட்டுலகம்.கொளல் (9) அரிது (7) (357)
|