(கு - ரை.) 1. "திருந்துகழ னோன்றாட் டண்ணிழி லேமே" (புறநா. 397 : 27). வாழ்க்கையை யான் பெறுவேன். 2. இசை - கீர்த்தி. நுவறலை அவன் பெறுக. 3. தொழுவர் - தொழிலைச் செய்வோர் ; "நெல்லரியு மிருந்தொழுவர்", "நெல்லரி தொழுவர்" (புறநா. 24 : 1, 209 : 2) ; "நெல்லரி தொழுவர்" (நற். 195 : 6). வாள் - அரிவாள். இவ்வடி, தொல். எச்ச. சூ. 19, ந. மேற். 4. அரிய - அரிதற்கு. கல் செத்து - தீட்டுங் கல்லாக அறிந்து. 5. அள்ளல் - சேறு. புறம் - முதுகு. உரிஞ்சும் - தீட்டும். 6. அமலுதல் - நெருங்குதல் ; "கண்பமல் பழனம்" (மலைபடு. 454). புரவு - விளைநிலம்; புறநா. 260 : 9. இலங்கை - மாவிலங்கையென்னுமூர் ; புறநா. 176 : 6; "தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய, நன்மா விலங்கை மன்ன ருள்ளு, மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா, ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்" (சிறுபாண். 119-22) 3 - 6. "அன்னந் துயிலெழுப்ப வந்தா மரைவயலிற், செந்நெலரிவார் சினையாமை - வன்முதுகிற், கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சல நாடன்" (நள. சுயம்வர. 143) 8. குறுந்தாளேற்றை - ஆண்பன்றி. விளர் - வெண்மை ; விளரூன் : புறநா. 359 : 5, குறிப்புரை. 9. நாட்சோறு ஈயா - காலையுணவை அளித்து. 9 - 10. ஈயாப் பசிதீர்த்தல்வல்லன். 11. கொன்வரல் வாழ்க்கை - விடியற்காலத்தில் வந்து தடாரி வாசித்தலாலுண்டாகிய செல்வம் ; கொன் -விடியற்காலம். விடியற்காலத்துக் கிணைப்பறைகொட்டித் தலைவன் புகழைப் பாடுதல் பொருநர்க் கியல்பு. (சீவக. 173, ந. மேற்.) 12. தண்டாது - அமையாமல். 13. விண் தோய் - ஆகாயத்தை அளாவிய. 15. தூவா - உண்ணாத. 14 - 5. "தாயி றூவாக் குழவி போல" (புறநா. 4 : 18) 16. ஐது - மெல்லிது. 17. மங்குலின் - மேகம்போல. உடன் - ஒருங்கு. ஊர் (18) வந்தனென் (14) (379)
|