(கு - ரை.) 1 - 2. “குயிலொத்திருள்குஞ்சி கொக்கொத் திருமல், பயிலப் புகாமுன்னநெஞ்சே” (11-ஆம் திருமுறை, க்ஷேத்திரத்.12) 3. புறநா. 279: 4. 3 - 4. புறநா. 278: 9, 265: 5 - 7; “ஈன்றபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச், சான்றோனெனக்கேட்ட தாய்” (குறள், 69); “மற்றவன்சொன்னவாசகங் கேட்டலு மகனைப், பெற்ற வன்றினும் பிஞ்ஞகன்பிடித்தவப் பெருவில், இற்ற வன்றினு மெறிமழு வாளவனிழுக்கம், உற்ற வன்றினும் பெரியதோ ருவகையனானான்” (கம்ப. அயோத்தி. மந்திர. 42) 5. வலியமூங்கில் அசைகின்ற வெதிரத்தில்;வெதிரம்: ஒருமலை. 6. மேகம் மழைபொழிய வீழ்ந்ததுளிகளிலும் பலவாகும். மு. காஞ்சித்திணைத் துறைகளுள்,‘பேரிசை, மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற,மாய்ந்த பூசன் மயக்கம்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 19, இளம்; சூ. 24, ந. (277)
|