(கு - ரை.) 1. தொடுகடல் - செறித்தகழல்; புறநா. 77 : 1. மையணற்காளை: “செய்வினைப்பொலிந்த செறிகழ னோன்றாள், மையணற் காளையொடு”(ஐங்குறு. 389); “மையணற் காளை மகிழ்துடி” (பு.வெ. 12) 4. மு. புறநா. 255 : 3, 291 : 5. ‘என்போற்பெருவிதுப் புறுக வென்புழி, போலென்பது போல என்னுஞ்செயவெனெச்சக் குறிப்பாகிய உவமவுருபு’ (தொல்.எச்ச. சூ. 18, ந.) 6. மையலூர்: குறுந். 374 : 7. மு. ‘அடிபுனை தொடுகழன்.....மைய லூரே:இது பெருங்கோழி நாய்கன் மகளொருத்தி, ஒத்தஅன்பினாற் காமமுறாதவழியும் குணச்சிறப்பின்றித்தானே காமமுற்றுக் கூறியது இதனின் அடக்குக’ (தொல்.புறத்திணை. சூ. 28, ந.) (83)
1 தாடி-வீசை; “இரலை, மருப்பிற்றிரிந்து மறிந்துவீழ் தாடி” (கலித். 15); “கலையிருமருப்பிற் கோடிக் காதள வோடுந் தாடி”(திருவிளை. 26 : 22) 2 “அச்சமு நாணு மடனுமுந் துறுத்த, நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப” (தொல். களவு. சூ. 8); உட்கு நாணு மொருங்குவந்தடைதர”(பெருங். 3. 6 : 87, 4-13 : 100)
|